இரவில் சரியாக தூங்காத நபர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் அத்தியாவசியமானது. சுமார் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. ஒரு நபர் சரியாக தூங்காமல் இருந்தால், அவருடைய மனம் அல்லது உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சர்க்கரை நோய், இதய நோய், நினைவாற்றல் செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் ஆகிய உடல் நலப் பிரச்சனைகளுக்கு சரியான தூக்கம் இல்லாதது தான் காரணமாக சொல்லப்படும். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இந்த பட்டியலில் ஆஸ்துமாவும் இணைந்துள்ளது. சமீபத்திய ஆய்வவின்படி, முறையான தூக்கம் இல்லாத ஒரு நபர் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகிறார் என தெரியவந்துள்ளது.
சீன நாட்டை சேர்ந்த ஷான்டாங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் யூகே பயோபேங்க் ஆய்வு தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் பல தகவல்கள் தெரியவந்துள்ளன. சுமார் 38 முதல் 73 வயதுக்கு உட்பட்ட 4,05,455 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மக்களிடம் தூக்க பழக்கங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதாவது ஆய்வில் மக்களின் தூங்கும் நேரம், குறட்டை, தூக்கமின்மையால் பாதிப்பு, நாள் முழுவதும் தூங்குவார்களா? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இப்படியான கேள்விகளின் அடிப்படையில் கிடைக்கப்பட்ட தரவுகளில், தூக்கமின்மை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்துமா நோயின் ஆரம்ப அறிகுறி இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வந்தது.
தூக்கமின்மை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரபணு பாதிப்பு இருப்பவர்களுக்கு ஆஸ்துமா அபாயம் இருப்பதும் கண்டறியப்பட்டது. ஒரு நபர் சரியான தூக்க வழக்கங்களை பின்பற்றி வந்தால், அவர்களுக்கு ஆஸ்துமாவின் அபாயம் குறைவாகவே இருந்துள்ளது. தூக்கமின்மை கோளாறுகளை முன்கூட்டியே கண்டறிந்து முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஆஸ்துமா உள்ளிட்ட பல பிரச்சனைகளை தடுக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: கோடைகாலத்தில் பலாப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா! உடலின் பல நோய்களை 1பலா சுளை எவ்வாறு தீர்க்கிறது தெரியுமா?
தூங்குவதற்கு சில டிப்ஸ்!!
இதையும் படிங்க: டாய்லெட்டில் மொபைல் பார்க்கும் பழக்கம்! ஆனா அங்கெல்லாம் போன் கொண்டு போனால், எத்தனை நோய்கள் வரும்னு தெரியுமா?