சப்பாத்திக்கு எப்போதும் குருமாவே செய்து சாப்பிடாதீங்க! இந்த மாதிரி சோயா கீமாவையும் 1 தடவ செய்து பாருங்க!

By Dinesh TG  |  First Published Apr 16, 2023, 7:55 AM IST

வாருங்கள்! டேஸ்ட்டான சோயா கீமா மசாலா ரெசிபியை வீட்டில் எளிமையாக என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


வழக்கமாக சப்பாத்தி ,பூரி என்றால் நாம் அனைவரும் உருளைக்கிழங்கு,பட்டாணி,தக்காளி குருமா என்று தான் செய்வோம். அதனை தவிர்த்து வேறு ஏதாவது என்றால் கொஞ்சம் யோசிக்க தான் வேண்டும். ஒரு சிலர் எப்போதாவது பன்னீர், சிக்கன் போன்றவற்றை செய்வார்கள். 

இன்று நாம் சோயா வைத்து சூப்பரான சோயா கீமா மசாலா ரெசிபியை இன்று செய்ய உள்ளோம். இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வழக்கமாக சாப்பிடுகின்ற ரெசிபியை போல் அல்லாமல் ஒரு நல்ல சுவையான கொஞ்சம் டிஃபிரண்ட்டான சுவையில் இருக்கும். வாருங்கள்! டேஸ்ட்டான சோயா கீமா மசாலா ரெசிபியை வீட்டில் எளிமையாக என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

சோயா - 3/4 கப்
வெங்காயம்- 1
பச்சை மிளகாய்-2
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
தக்காளி-2
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
தனியா தூள்-1 ஸ்பூன்
கரம் மசாலா -1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

முதலில் சோயாவை வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு சுமார் 1/2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொண்டு பின் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை கையால் பிய்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது மிக்சி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடான பின் அதில் , பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

வெங்காயம் வதங்கிய பின்னர், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து வதக்கி விட வேண்டும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை சென்ற பிறகு, தக்காளி சேர்த்து வதக்கி விட வேண்டும். அடுத்தாக அதில் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் ஆகியவை சேர்த்து நன்றாக கிளறி விட்டு சிறிது தண்ணீர் தெளித்து மசாலாவின் கார வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.

அடுத்தாக அதில் சோயாவை சேர்த்து நன்றாக கிளறி விட்டு தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும். கலவை கெட்டியாக மாறிய பின்னர், அடுப்பில் இருந்து இறக்கி அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி பரிமாறினால் சூப்பரான சுவையில் சோயா கீமா மசாலா ரெடி!

கத்திரிக்காயா! என்று முகம் சுளிப்பவர்கள் கூட, இப்படி செய்து கொடுத்தால், கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

Tap to resize

Latest Videos

click me!