Raw Banana: வாழைக்காயில் இத்தனை மருத்துவ குணங்களா? மறக்காமல் சாப்பிடுங்க!

By Dinesh TGFirst Published Nov 22, 2022, 10:24 PM IST
Highlights

தொன்றுதொட்டு காலங்காலமாகவே வாழை மரங்கள், தமிழர் பண்பாட்டோடு பின்னிப் பிணைந்துள்ளது. வாழையின் இலை முதல் தண்டு வரை அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. அவ்வகையில், வாழைக்காயில் உள்ள மருத்துவப் பலன்கள் பற்றி இங்கு காண்போம்.
 

தொன்றுதொட்டு காலங்காலமாகவே வாழை மரங்கள், தமிழர் பண்பாட்டோடு பின்னிப் பிணைந்துள்ளது. வாழையின் இலை முதல் தண்டு வரை அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. அவ்வகையில், வாழைக்காயில் உள்ள மருத்துவப் பலன்கள் பற்றி இங்கு காண்போம்.

வாழைக்காயின் பலன்கள்

வாழைக்காயில் பல்வேறு மருத்துவப் பலன்கள் நிரம்பியுள்ளன. வாழைக்காயை அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால், பெருங்குடல் மற்றும் செரிமான உறுப்புகளில் தேங்கும் கழிவுகள் மற்றும் நச்சுக்களையும் வெளியேற்றுகின்ற தொழிற்பாட்டை மேற்கொள்கிறது. ஆகவே வயிற்றுப் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. 

எலும்புகளின் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் தேவையான வைட்டமின், கல்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை வாழைக்காயில் அதிகளவில் நிரம்பியுள்ளது. இதனால், நமது உடலில் இருக்கும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Skin Lesions: சர்க்கரை நோயாளிகளே: தோல் புண்களை சரி செய்யும் சில எளிய முறைகள்!

வாழைக்காயில் உப்புச்சத்து குறைந்த அளவிலும், பொட்டாசியம் சத்து அதிகளவிலும் இருப்பதால், நம் உடலில் இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. வாழைக்காயில் இருக்கும் நார்ச்சத்து, செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், தினந்தோறும் வாழைக்காயை உணவில் அதிகளவில் எடுத்துக் கொள்வதன் மூலமாக மிகச் சிறந்த பலன்களை பெற முடியும். உடலின் தசைகளில் உள்ள கொழுப்புகளை வாழைக்காய் கரைப்பதால், உடல் எடையை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

வாழைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகளவில் நிரம்பியுள்ளது. பொட்டாசியமானது உடலில் உள்ள நரம்புகளின் இடையே இறுக்கத்தன்மை ஏற்படாத வகையில் தடுக்கிறது.

கண்பார்வை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அனைவருக்கும் மிக அவசியமாகும். வாழைக்காயில் வைட்டமின் A அதிகளவில் நிறைந்துள்ளது. இது, கண்களில் கண்புரை ஏற்படுவதனை தடுக்கிறது. அதோடு விழிப்படலம் மற்றும் கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.

வாழைக்காயில் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால், தினந்தோறும் உணவில் வாழைக்காயை எடுத்துக் கொள்வதன் காரணமாக, நாள் முழுக்க சுறுசுறுப்பு மற்றும் உற்சாகம் நிறைந்திருக்கும்.

click me!