செரிமானப் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக ரசம் கடைசியாக பயன்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது பலரும் தவறாமல் ரசம் சாப்பிடுகிறார்களா என்றால், இல்லை என்பதே உண்மை. சிலருக்கு அதிகளவிலான செரிமானப் பிரச்சனை இருக்கும்
நம் முன்னோர்களின் பழங்கால உணவு முறையில், அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு முடித்தவுடன், கடைசியாக ரசம் கலந்து சிறிது சாதம் சாப்பிடுவார்கள். சிலரோ ரசத்தை குடித்து உணவை முடிப்பார்கள். செரிமானப் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக ரசம் கடைசியாக பயன்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது பலரும் தவறாமல் ரசம் சாப்பிடுகிறார்களா என்றால், இல்லை என்பதே உண்மை. சிலருக்கு அதிகளவிலான செரிமானப் பிரச்சனை இருக்கும். இதனால், மலச்சிக்கல் ஏற்படுகிறது. மேலும் இந்தப் பிரச்சனையின் காரணமாக உடல் சோர்வு, பசியின்மை, உற்சாகமின்மை மற்றும் குமட்டல் என பல பிரச்சனைகள் ஏற்படும்.
கடைகளில் உள்ள உணவுகளை சாப்பிடுவது, தேவையற்ற நேரங்களில் உணவு உட்கொள்வது, காலநிலை மாற்றம் மற்றும் போதிய அளவு தண்ணீர் உடலில் இல்லாமல் போவது போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அவ்வகையில் இப்பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் ஒரு அற்புதமான பானத்தை எப்படி தயாரிப்பது என தெரிந்து கொள்ளலாம்.
undefined
அற்புத பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்
எலுமிச்சைப் பழச்சாறு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
விளக்கெண்ணெய்- 1 டீஸ்பூன்
தண்ணீர் - ஒரு கிளாஸ்
உப்பு - தேவையான அளவு
தயாரிப்பு முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மிக குறைந்த சூட்டில் வைத்த பின்னர், ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றி நன்றாக சூடேற்ற வேண்டும்.
பிறகு, சுடுநீருடன் ஒரு டீஸ்பூன் சோம்பு/சீரகம் விட்டு ஒரு கொதி வந்ததும், இறக்கி விட வேண்டும். சூடு சற்று ஆறியதும் ஒரு கிளாஸில் ஊற்றிக் கொள்ளவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் உப்பு சேர்ப்பது அவசியமில்லை எனினும் தேவை ஏற்படின் சிறிதளவு சேர்த்து கொள்ளலாம்.
பானத்தின் பலன்கள்
மலச்சிக்கல் ஏற்படும் நேரங்களில், இந்த அருமையான பானத்தை காலை மற்றும் இரவு வேளைகளில் குடிக்கலாம். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை விரைவாக குணமடையும்.