Broccoli Soup : மழைக்காலத்திற்கு ஏற்ற ப்ரக்கோலி சூப்!

By Dinesh TGFirst Published Nov 22, 2022, 7:14 PM IST
Highlights

சத்தான அருமையான சுவையில் ப்ரக்கோலி சூப்பை ஈஸியாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மழைக் காலங்களில் அனைவருக்கும் ஏற்ற இதமான ஒரு சூப் தான் இன்று நாம் காண உள்ளோம்.வழக்கமாக நாம் சிக்கன் சூப், ஆட்டுக்கால் சூப், காளான் சூப், காய்கறி சூப் என்று பல விதமான சூப்களை செய்து சுவைத்து இருப்போம். 

அந்த வகையில் இன்று நாம் சுவையான ப்ரக்கோலி சூப் காண உள்ளோம். ப்ரக்கோலியில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் நம் உடலில் இருக்கும் கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றன. 

சத்தான அருமையான சுவையில் ப்ரக்கோலி சூப்பை ஈஸியாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

ப்ரோக்கோலி - ஒரு கப்
பட்டர் - 1 ஸ்பூன் 
மிளகுத்தூள் -2 ஸ்பூன் 
கார்ன் பிளார்-1 ஸ்பூன் 
வெங்காயம் - 1
மல்லித்தழை - கையளவு
துருவிய சீஸ் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு

சத்தான ஹலீம் கஞ்சி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க!

செய்முறை :

முதலில் வெங்காயம் மற்றும் மல்லித் தழையை மிக பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.அடுத்து ப்ரோக்கோலியின் தண்டு பகுதியை நீக்கி விட்டு,சிறிய சிறிய துண்டுகளாக அரிந்து கொண்டு அதனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு கிண்ணத்தில் கார்ன் பிளார் போட்டு தண்ணீர் சேர்த்து கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது பட்டர் சேர்த்து உருகிய பின்,அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.வெங்காயம் வதங்கிய பிறகு, அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் வதக்கி விட வேண்டும். 

இப்போது கடாயில் 4 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்.பின் அதனுடன் கார்ன் பிளார் கரைசல் ஊற்றி கைவிடாமல்( கட்டி ஆகாதவாறு) கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.இப்போது சுத்தம் செய்து அரிந்து வைத்துள்ள ப்ரக்கோலியை சேர்த்து வேக வைக்க வேண்டும். (அடுப்பின் தீயனை சிம்மில் வைக்க வேண்டும்) 

ப்ரக்கோலி வெந்த பிறகு,அதனை தண்ணீர் இல்லாமல் எடுத்து, ஆற வைத்துக் கொண்டு, ஒரு மிக்சி ஜாரில் போட்டு 1 சுற்று சுற்றி, அதனை மீண்டும் கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொதித்து கொஞ்சம் கெட்டியானவுடன் கையளவு துருவிய சீஸ், மிளகுத்தூள் சேர்த்து ஒரு கப்பில் ஊற்றி அதன் மேல் மல்லித்தழையை தூவினால் சூப்பரான ப்ரோக்கோலி சூப் ரெடி!

click me!