குட்டிஸ்க்கு பிடித்த கார்ன் ஃப்ளேக்ஸ் குக்கீஸ் செய்யலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Nov 22, 2022, 5:10 PM IST

இன்று நாம் சூப்பரான கார்ன் ஃப்ளேக்ஸ் குக்கீஸை வீட்டில் சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து தெரிந்து கொள்ளலாம். 


பிஸ்கேட், குக்கீஸ் ஆகியவற்றை நாம் பெரும்பாலும் வெளியில் கடைகளில் சென்று தான் வாங்கி சுவைத்து இருப்போம். குக்கீஸ் போன்றவற்றை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான கார்ன் ஃப்ளேக்ஸ் குக்கீஸை வீட்டில் சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து தெரிந்து கொள்ளலாம். 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய சூப்பரான கார்ன் ஃப்ளேக்ஸ் குக்கீஸ். இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் வைத்து அனுப்பினால், கொஞ்சம் கூட மிச்சசம் இல்லாமல் சாப்பிட்டு இருப்பார்கள்.

Tap to resize

Latest Videos

தேவையான பொருட்கள்:

கார்ன் ஃப்ளேக்ஸ் - ஒரு கப்
வால்நட் - 2 ஸ்பூன் 
ட்ரை ஃப்ரூட்ஸ் - 3 ஸ்பூன்
வெண்ணெய் - 30 கிராம்
 தேன் - 3 ஸ்பூன் 

சுவைக்க சுவைக்க ருசிக்கத் தோன்றும் ''மணத்தக்காளி வத்தக் குழம்பு''!

செய்முறை:

முதலில் கார்ன் ஃப்ளேக்ஸ்களை கையால் பொடித்துக் கொள்ள வேண்டும். நட்ஸ்களையும், ட்ரை ஃப்ரூட்ஸையும் மிக்சி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவனை 180 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து கொள்ள வேண்டும். 

அடுத்து அடுப்பில் 1 நாண் ஸ்டிக் தவாவைவைத்து விட வேண்டும். பின் அதில் வெண்ணெய் சேர்த்து உருக்கி கொள்ள வேண்டும். வெண்ணெய் உருகிய பின்பு, தேன் சேர்த்து, தீயினை சிம்மில் வைத்து , .இரண்டையும் நன்றாக கலந்து விட வேண்டும். 

இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்து கேரமல் போன்று நன்றாக நுரைத்து வரும். அப்போது கார்ன் ஃப்ளேக்ஸைச் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட வேண்டும். அனைத்தும் நன்கு கலந்து ,வாசனை வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். பின் அதில் பொடித்த நட்ஸ் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ்களை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

இப்போது கப் கேக் ட்ரேயில் கப் பேப்பரை விரித்து அனைத்து கப்களிலும் 1/2 குழிக் கரண்டி அளவு ஃப்ளேக்ஸ் மிக்சிங் போட்டு ப்ரீஹீட் செய்து வைத்துள்ள அவனில் சுமார் 10 நிமிடங்கள் வைத்து பேக் செய்ய வேண்டும். அவனில் இருந்து வெளிய எடுத்து, ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஆறிய பிறகு நன்கு மொறுமொறுவென இருக்கும். அவ்ளோதான் க்ரிஸ்பி கார்ன் ஃப்ளேக்ஸ் குக்கீஸ் ரெடி!!!  

இதனை காற்று புகாத ஒரு பாக்ஸில் போட்டு மூடி வைத்தால் இரண்டு வாரங்கள் வரை கூட அப்படியே செய்தது போல் சூப்பராக இருக்கும். 

click me!