இன்று நாம் சப்பாத்தியை வைத்து சுவையான சில்லி கொத்து சப்பாத்தியை வீட்டில் சுவையாகவும் சுலபமாகவும் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் இட்லி, தோசை, பூரி, பொங்கல் என்று சாப்பிட்டு அலுத்து விட்டதா? சற்று வித்தியாசமாக , சுவையாக சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்போ இந்த ரெசிபியை ஒரு முறை செய்து பாருங்க.
இதன் சுவை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் இருக்கும். இதென்ன ரெசிபி என்று பார்க்க வேண்டுமா? சுவையான சில்லி கொத்து சப்பாத்தி தான் இன்று நாம் பார்க்க போகும் ரெசிபி ஆகும்.
undefined
வழக்கமாக பரோட்டாவை தான் கொத்து பரோட்டாவாக செய்து சுவைத்து இருப்போம். இன்று நாம் சப்பாத்தியை வைத்து சுவையான சில்லி கொத்து சப்பாத்தியை வீட்டில் சுவையாகவும் சுலபமாகவும் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி - 4
முட்டை - 2
சோம்பு-1/4 ஸ்பூன்
கிராம்பு-3
பட்டை -1 இன்ச்
சோம்புத்தூள் -1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் -1 ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 1
கேப்ஸிகம் - 1/2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
அனைவருக்கும் ஏற்ற ரைட் சாய்ஸ்- க்ரிஸ்பியான தோசை!
செய்முறை:
முதலில் சப்பாத்திகளை சுட்டு அதனை சின்ன சின்ன பீஸ்களாக பிய்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம்,தக்காளி ,மிளகாய், கேப்ஸிகம் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான் பின் சோம்பு, கிராம்பு ,பட்டை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தளித்துக் கொள்ள வேண்டும்.
தாளித்த பிறகு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும். அடுத்து பச்சை மிளகாய் சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும். அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர், தக்காளி சேர்த்து, தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கி விட்டு, பின் கேப்ஸிகம் சேர்த்து வதக்கி விட வேண்டும். அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து,அதன் வாசனை செல்லும் வரை வதக்கி விட்டு, பின் கரம் மசாலா,மிளகாய் தூள்,சோம்பு தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
மசாலாக்களின் காரத் தன்மை செல்லும் வரை வதக்கி விட்டு, பின் அதில் பிய்த்து வைத்துள்ள சப்பாத்தி பீஸ்களை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இப்போது சப்பாத்தியோடு மசாலாக்கள் நன்றாக சேர்ந்த பின்னர், முட்டையை உடைத்து கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முட்டை வெந்து நன்றாக கலவையுடன் நன்கு ஒட்டி, வாசனை கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி இறக்கினால் சூப்பரான சுவையான சில்லி கொத்து சப்பாத்தி ரெடி!!!
இதற்கு தயிர் பச்சடி அல்லது சால்னா வைத்து சாப்பிட்டால், தட்டில் வாய்த்த அடுத்த நிமிடம் காலி ஆகிவிடும் நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.