3 தடுப்பூசிகள் போட்ட பிறகும் கோவிட் ஆண்டிபாடிகள் இல்லை.. இவர்களுக்கு தான் அதிக ஆபத்து.. புதிய ஆய்வு

By Ramya s  |  First Published Aug 18, 2023, 5:07 PM IST

3 அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் போட்ட பிறகும் கூட, சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்தில் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக கணிசமாக குறைந்திருந்த நிலையில், தற்போது புதிய மாறுபாடுகள் உருவாகி வருகிறது. இதனால் கோவிட் தொற்று மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. யாருக்கு வேண்டுமானாலும், கொரோனா பாதிப்பு ஏற்படலாம். ஆனால் வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்கள் ஆகியோருக்கு எளிதில் கொரோனா தொற்று ஏற்படுகிறது. இப்படி எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு, தடுப்பூசிகள் ஒரு குறிப்பிட்ட அளவிலான பாதுகாப்பை வழங்கியுள்ளன.

ஆனால், 3 அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் போட்ட பிறகும் கூட, சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்தில் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தடுப்பூசிகள் போட்ட பிறகும் அவர்களுக்கு ஆண்டிபாடிகள் உருவாகவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Tap to resize

Latest Videos

ஆய்வு விவரங்கள்

இம்பீரியல் காலேஜ் லண்டன், சவுத்தாம்ப்டன், நாட்டிங்ஹாம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள், நாட்டிங்ஹாம் யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல்ஸ் என்ஹெச்எஸ் டிரஸ்ட் ஆராய்ச்சியாளர்களின் குழுவால் நடத்தப்பட்ட மெலோடி ஆராய்ச்சி, 23,000 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் குறைந்தது 3 கோவிட்-19 தடுப்பூசி டோஸ்களை போட்டவர்கள் ஆவர். எனினும் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படவில்லை..

அதிக முறை உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா மாறுபாடு.. எத்தனை நாடுகளில் பரவி உள்ளது?

இந்த ஆய்வில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் தங்கள் வயது, பாலினம் மற்றும் இனம், அவர்களின் நிலை பற்றிய தகவல்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை உட்பட அவர்களின் COVID-19 வரலாறு போன்ற தனிப்பட்ட விவரங்களையும் வழங்கினர்.

நோய்த்தடுப்பு மற்றும் அழற்சித் துறையைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் மிச்செல் வில்லிகோம்ப் இதுகுறித்து பேசிய போது, "பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை முந்தைய ஆராய்ச்சியில் இருந்து நாங்கள் அறிவோம். அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய வாய்ப்புகள் அதிகம். மேலும் அவர்கள் கொரோனா காரணமாக உயிரிழக்கலாம். தடுப்பூசிகள் ஆன்டிபாடிகளை உருவாக்க நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகின்றன. ஆனால் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாக இருந்தால், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் கடுமையான நோயைத் தடுப்பதற்கும் தேவையான போதுமான ஆன்டிபாடிகளை நீங்கள் உற்பத்தி செய்யாமல் போகலாம். அதிக ஆபத்தில் இருக்கும் மருத்துவரீதியாக பாதிக்கப்படக்கூடிய நோயாளிகள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பைப் பெறுவதற்காக ஒரு பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் " என்று தெரிவித்தார்.

ஆய்வின் கண்டுபிடிப்புகள்

தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், திட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, அரிதான ஆட்டோ இம்யூன் நோய் அல்லது இரத்தப் புற்றுநோய் உள்ள ஐந்தில் ஒருவருக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசி போட்ட பிறகு, அவர்களுக்கு கொரோனா ஆன்டிபாடிகள் இல்லை என்று கண்டறியப்பட்டது.

கூடுதலாக, சில மருந்துகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துவதுடன், ஆன்டிபாடிகள் இருப்பதற்கான வாய்ப்பையும் குறைக்கின்றன என்று ஆய்வு கூறுகிறது. மாறாக,  இளைஞர்கள், இளையவர்கள்
அதிக தடுப்பூசி டோஸ் போட்டவர்கள் கொண்டவர்கள் (உதாரணமாக மூன்று தடுப்பூசிகளுக்குப் பதிலாக ஐந்து தடுப்பூசிகள்)
ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு அதிகமான கோவிட் ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா ஆன்டிபாடிகள் குறைவாக இருக்கும் நபர்களை கண்டறியவும், ஆன்டிபாடி சோதனை மற்றும் COVID தடுப்பூசி அளவுகள் போன்ற இலக்கு தலையீடுகளை வழங்குவதையும் இந்த ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆன்டிபாடிகளின் பங்கு

இம்யூனோகுளோபுலின்ஸ் (Ig) என்றும் அழைக்கப்படும் ஆன்டிபாடிகள், நோய்த்தொற்றுகளுக்கு எதிராக நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நோய்க்கிருமிகளின் மேற்பரப்பில் உள்ள மூலக்கூறுகளான ஆன்டிஜென்களை அவை அடையாளம் கண்டு பிணைக்கின்றன, மேலும் ஆரோக்கியமான செல்களுக்குள் நுழைவதை தடுக்கின்றன.

எனவே கொரோனா எதிராக போரிடுவதில் கோவிட் ஆன்டிபாடிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை வைரஸை அடையாளம் கண்டு அவை, செல்களுக்குள் நுழைவதைத் தடுக்கின்றன மற்றும் அதை அகற்ற உதவுகின்றன. ஆன்டிபாடிகள் நோயெதிர்ப்பு நினைவகத்திற்கு பங்களிக்கின்றன, எதிர்கால நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன 

கொரோனா பாதிப்பு குறைந்திருந்தால் புதிய மாறுபாடுகள் மற்றும் துணை வகைகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. எனவே மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பராமரிப்பது, சரியான கை சுகாதாரத்தை கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

click me!