
உலகம் முழுவதும் காபி பிரியர்கள் ஏராளம். தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. காபி ஒரு புத்துணர்ச்சி பானம் என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. அந்தவகையில் நீங்கள் இன்ஸ்டன்ட் காபி பிரியரா? உங்களை அதிர்ச்சிக்குள்ளாகும் ஒரு செய்தி! அதாவது தினமும் இன்ஸ்டன்ட் காபி குடித்தால் பார்வையிழப்பு ஏற்படும் என்று சமீபத்தில் வெளிவந்த ஒரு புதிய ஆய்வு நிரூபித்துள்ளது. இதுகுறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
சீன ஆய்வு!
இதுகுறித்து சீனாவில் உள்ள ஷூபே யுனிவர்சிட்டி ஆஃப் மெடிசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இன்ஸ்டன்ட் காபி குறித்து ஒரு ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சீன மக்களுக்கு மரபணுக்கள் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் இன்ஸ்டன்ட் காபி குடிப்பவர்களுக்கும் AMD (age related macular degeneration) பார்வை இழப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
AMD என்றால் என்ன?
AMD என்பது ஒரு பொதுவான கண் நோய். இது கண் பார்வை திறனை மீட்டெடுக்க முடியாத நாள்பட்ட ஒரு கண் நோயாகும். முக்கியமாக வயதானவர்களுக்கு ஏற்படும் பார்வை இழப்புக்கு இதுதான் முக்கிய காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இவை இரண்டு வகைப்படும் ஒன்று உலர்ந்த ஏஎம்டி, மற்றொன்று ஈரம் நிறைந்த ஏஎம்டி ஆகும். வறண்டதுக்கு எந்த சிகிச்சையும் இல்லை, மறுபுறம் ஈரப்பதம் நிறைந்த ஏஎம்டி விரைவான பார்வை இழப்பை ஏற்படுத்திவிடும். ஆனாலும் இதற்கு சிகிச்சை அளிக்க முடியும். சில சமயங்களில் வறண்ட ஏஎம்டி ஆனது ஈரமான ஏஎம்டியாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கண்களுக்குப் பின்புறம் இருக்கும் அசாதாரமான ரத்த நாளங்கள் வளைந்து மாக்குளாவை சேதப்படுத்துவதால் இது நிகழ்கிறது. 50 வயது மேற்பட்டோர்கள் தான் இந்த AMD பார்வை குறைபாட்டால் அதிகமாகவே பாதிக்கப்படுகிறார்கள். இந்நோய்க்கு எந்த ஒரு அறிகுறிகளும் இல்லை.
இன்ஸ்டன்ட் காபிக்கும் பார்வை இழப்புக்கும் உள்ள தொடர்பு:
இன்ஸ்டன்ட் காபியில் இருக்கும் அக்ரிலாமைடு என்ற ரசாயனம் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையுடையது. மேலும் அதில் ஆக்சிஜனேற்றப்பட்ட லிப்பிடுகள் மற்றும் பிற இரசாயனங்களும் உள்ளன. இந்த செயற்கையின் காரணமாக கண் மாகுலர் சிதைவு மற்றும் AMD பார்வை குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளன. இந்த குறைபாடானது முழுமையான குருட்டு தன்மையை ஏற்படுத்தாது ஆனால் பாதிக்கு மேல் பார்வையிழப்பை ஏற்படுத்தி விடும் என்று சொல்லுகின்றனர். எனவே நீங்கள் ஏஎம்டி பார்வை இழப்பை தவிர்க்க இன்ஸ்டன்ட் காபிக்கு பதிலாக அரைத்த காபி கொட்டைகள் பயன்படுத்தி குடியுங்கள்.