Red Hair : செம்பட்டை முடி கருகருன்னு மாறும்; இந்த '1' விஷயம் மட்டும் ட்ரை பண்ணுங்க

Published : Jul 01, 2025, 06:19 PM IST
hair care tips 6 egg hair masks that stimulate hair growth

சுருக்கம்

உங்களது முடி செம்பட்டையாக இருந்தால் கருகருன்னு மாற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள்.

இன்று பெரும்பாலானோர் தலைமுடியானது செம்பட்டையாகவே இருக்கின்றன. அதிலும் இளம்தலைமுறையினர் இந்த பிரச்சனையால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எவ்வளவுதான் தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்தாலும் முடி செம்பட்டையாகவே இருக்கும். தலைமுடி செம்பட்டையாக மாறுவதற்கு முதல் காரணம் போதுமான அளவு பராமரிப்பு இல்லாமல் இருப்பது தான். இத்தகைய சூழ்நிலையில், அதிக பராமரிப்பில்லாமல் உங்களது செம்பட்டையான கூந்தலை கருப்பாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். அவை என்னென்ன என்று இப்போது பார்க்கலாம்.

செம்பட்டை முடி கருப்பாக மாற வீட்டு குறிப்புகள் :

1. செம்பட்டையாக இருக்கும் கூந்தலை கருப்பாக மாற்ற ஆமணக்கு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். நல்ல பலன் கிடைக்கும். அதுவும் குறிப்பாக தலைக்கு குளிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இப்படி செய்ய வேண்டும். ஆலிவ் எண்ணெய் கூட பயன்படுத்தலாம்.

2. தேங்காய் பாலை முடியில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் செம்பட்டை முடி சரியாகிவிடும்.

3. செம்பட்டை முடி உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து சீயக்காய் போட்டு தலைக்கு குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

4. செம்பட்டை முடி உள்ளவர்கள் தலைமுடிக்கு ஈரப்பதம் கொடுக்கக்கூடிய ஷாம்பு தான் பயன்படுத்த வேண்டும். அதுபோல குளிக்கும் முன் தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து குளித்தால் முடியில் ஈரப்பதும் இருக்கும்.

5. நெல்லிக்காய் விதையை நிழலில் காய வைத்து பிறகு பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பிறகு தலையில் தேய்த்து வந்தால் முடி கருமையாக மாறும்.

6. முட்டையின் வெள்ளை கருவை முடியில் தேய்த்து குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடியின் நிறம் மாறும்.

7. மருதாணி இலை, செம்பருத்தி இலை, நெல்லிக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை நிழலில் நன்கு காயவைத்து பிறகு அதை பொடியாக்கி அவற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அந்த எண்ணெயை தினமும் முடியில் தடவி வந்தால் செம்பட்டை முடியின் நிறம் மாறும்.

8. தேங்காய் எண்ணெயில் கருவேப்பிலையை சேர்த்து காய்ச்சி அந்த எண்ணையை தினமும் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

9. ஒரு நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதனுடன் கால் அல்லது அரை கப் தயிர் சேர்த்து நன்கு கலந்து அதை முடியில் தடவி 15-30 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு லேசான ஷாம்பு போட்டு குளித்து வந்தால் முடியும் நிறம் கருமையாகும்.

10. கால் கப் சின்ன வெங்காயத்தை பொடியாக்க நறுக்கி, அதை அரை லிட்டர் நல்லெண்ணெயில் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். வெங்காயம் நன்றாக சுருங்கும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு எண்ணெய் ஆறியதும் அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றவும். நீங்கள் தலைக்கு குளிக்கும் போது சுமார் அரை மணி நேரத்திற்கு முன்னதாக இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து பிறகு லேசான ஷாம்பு போட்டு குளித்து வந்தால் செம்பட்டை முடி மறையும்.

முடி செம்பட்டையாக மாற காரணங்கள்:

1. சூரிய ஒளி - சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் முடியின் நிறமான மெலனியை பாதிக்கும். இதனால் முடியின் கருமை நிறம் குறைந்து செம்பட்டி நிறமாக மாறிவிடுகிறது.

2. கெமிக்கல்கள் பயன்பாடு - ஷாம்பு, கண்டிஷனர் போன்றவை தொடர்ந்து பயன்படுத்தினால் அதில் இருக்கும் கெமிக்கல்கள் முடியை பாதிக்கும். இது தவிர ஸ்ட்ரெய்ட்னிங், டை போன்றவையும் முடியை செம்பட்டியாக மாற்றும்.

3. மரபியல் காரணம் - மரபியல் காரணமாக சிலருக்கு முடி செம்பட்டியாகவே இருக்கும்.

4. வயது காரணம் - வயது அதிகரிக்க அதிகரிக்க முடியில் உற்பத்தியாகும் மெலனின் அளவு குறைந்து முடி நரைத்து செம்பட்டையாக நிறம் மாறும்.

5. உடல்நல பிரச்சனைகள் - தைராய்டு, ரத்தசோகை போன்ற உடல்நல பிரச்சினைகளால் முடியின் நிறம் பாதிக்கப்பட்டு, செம்பட்டையாக மாறும்.

6. பராமரிப்பு இல்லாமை - முடியை சரியாக பராமரிக்காமல் எண்ணெய் இருந்தால், முடி வளர்ச்சியாகப் பிறகு செம்பட்டை நிறத்திற்கு மாறிவிடும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க
Lip Scrub : உதடுகளின் கருமை நிறம் மாறி 'அழகாக' வாரம் 2 முறை 'இதை' தடவுங்க