பப்பாளி காய் 'இப்படி' செஞ்சு சாப்பிடுங்க!! சிறுநீரக பிரச்சனையை வரும்முன் தடுக்கும்

Published : Jul 03, 2025, 11:48 AM ISTUpdated : Jul 03, 2025, 11:53 AM IST
Papaya

சுருக்கம்

யூரிக் அமிலத்தின் அளவை கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் மூட்டு வலி, சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படும். ஆனால், பப்பாளி காயை வைத்து யூரிக் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்த முடியும் தெரியுமா? அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

யூரிக் ஆசிட் என்பது தற்போது ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. யூரிக் ஆசிட் இரத்தத்தில் அதிகமானால் கீல்வாதம், சிறுநீரக கற்கள் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். யூரிக் ஆசிட் அளவைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை. பப்பாளி காய் சிறுநீரக பிரச்சனையை வரும்முன் தடுக்க உதவுகிறது.

பப்பாளி நன்மைகள் :

1. பழுத்த மற்றும் காய் பப்பாளியில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடெ ன்ட்கள் அதிகமாகவே உள்ளன. இவை உடலில் யூரிக் அமில அளவை குறைக்கும்.

2. பப்பாளி காயில் பெப்பைன், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் உள்ளன இவை யூரிக் ஆசிட் உற்பத்தியை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், அதிகப்படியான யூரிக் அமிலத்தால் ஏற்படும் மூட்டு வலியையும் குறைக்க உதவும்.

3. பப்பாளிக் காயானது நம்முடைய உடல் உள் உறுப்புகளை சுத்தம் செய்யும் பண்புகளை கொண்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை டீடாக்ஸ் செய்து யூரிக் அமிலத்தின் அளவை குறைக்கும்.

4. பப்பாளிக் காயில் டையூரிக் பண்புகள் அதிகமாக உள்ளதால், அவை யூரிக் அமிலத்தை ரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கும். இந்த டையூரிக் பண்பானது சிறுநீர் பெருக்கியாக செயல்படுவதால், அதிகப்படியான சிறுநீரை வெளியேற்றும். சிறுநீர் வழியாக தான் யூரிக் அமிலத்தையும் வெளியேற்றும்.

யூரிக் ஆசிட் கட்டுப்படுத்த பப்பாளியை எப்படி சாப்பிட வேண்டும்?

சாலட் - பப்பாளியின் தோலை சீவி விட்டு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி சாலட் போல சாப்பிடலாம் அல்லது நீங்கள் விரும்பி சாப்பிடும் சாலட்டுடன் இதை கலந்து சாப்பிடுங்கள்.

பொரியல் - முட்டைக்கோஸ், பீட்ரூட் போன்ற காய்கறிகளை பொரியலாக செய்வது சாப்பிடுவது போல பப்பாளி காயையும் பொரியலாக செய்து சாப்பிடுங்கள்.

கூட்டு - சுரைக்காய் கூட்டு போன்ற காய்கறிகளை கூட்டாக செய்து சாப்பிடுவது போல பப்பாளி காயையும் கூட்டு செய்து சாப்பிடலாம். ஆனால் பருப்பு அதிகம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

சட்னி - பப்பாளி காயுடன் சின்ன வெங்காயம் காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல் புலி ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து சட்னியாக கூட சாப்பிடலாம்.

ஊறுகாய் - இன்ஸ்டன்ட் ஊறுகாய் செய்வது போல பப்பாளி காயையும் செய்யலாம்.

சூப் - பப்பாளி காயை சூப்பாக செய்து கூட சாப்பிடலாம். மேலும் சாம்பாரில் கூட பப்பாளி காயை சேர்த்துக் கொள்ளலாம்.

இதில் கவனம்!!

- பப்பாளி காயை கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது குழந்தையின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும்.

- சிலருக்கு பப்பாளி அலர்ஜியை ஏற்படுத்தும் அப்படிப்பட்டவர்கள் பப்பாளிக்காய் சாப்பிட வேண்டாம்.

- அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல பப்பாளி காயை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அளவோடு எடுத்துக் கொள்வது தான் நல்லது.

யூரிக் ஆசிட் அளவை குறைக்க உதவும் பிற உணவுகள் -

பூசணிக்காய் சுரைக்காய் போன்ற நீர் காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், முட்டை கோஸ், பச்சை இலை காய்கறிகள், செர்ரி பழ வகைகள், கிரீன் டீ, சிட்ரஸ் பழங்கள் மற்றும் முட்டை.

குறிப்பு :

யூரிக் ஆசிட் அல்லது கீழ் வாத பிரச்சனை அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று அதற்குரிய பரிசோதனை எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக உங்களது உணவில் ஏதேனும் மாற்றத்தை செய்ய விரும்பினால் முதலில் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?