ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால், உலக சுகாதார அமைப்பு உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. குறிப்பாக காங்கோவில் புதிய, அதிகமாக பரவும் வைரஸ் மாறுபாடு கவலையை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் இல்லாததால், இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
ஆப்பிரிக்காவில் பரவி வரும் Mpox என்ற குரங்கு அம்மை குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ள அந்த அமைப்பு இது பல நாடுகளில் பரவக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அவசர குழு கூட்டத்திற்கு பின், அதன் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கடந்த செவ்வாய் கிழமை குரங்கு அம்மையை ஒரு பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. இந்த ஆண்டு ஆப்பிரிக்காவில் 14,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 524 இறப்புகளும் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இது ஏற்கனவே கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களை விட அதிகமாகும்.
undefined
இதுவரை காங்கோவில் 96%க்கும் அதிமான பாதிப்பு மற்றும் இறப்பு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எளிதில் பரவக்கூடிய நோயின் புதிய மாறுபாடு பரவுவதால் விஞ்ஞானிகள் கவலையடைந்துள்ளனர்.
mpox என்றால் என்ன?
1958 ஆம் ஆண்டில் குரங்குகளில் "பாக்ஸ் போன்ற" நோய் பரவிய போது, குரங்கு அம்மை என்றும் அழைக்கப்படும் Mpox வைரஸ் முதன்முதலில் விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டது. சமீப காலம் வரை, பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மக்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் இந்த நோயால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. 2022 ஆம் ஆண்டில், இந்த வைரஸ் முதன்முறையாக உடலுறவு மூலம் பரவுவது உறுதி செய்யப்பட்டது. மேலும் உலகம் முழுவதும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது.
Mpox பெரியம்மை போன்ற வைரஸ்களின் குடும்பத்தைச் சேர்ந்தது ஆனால் காய்ச்சல், குளிர் மற்றும் உடல் வலி போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. மிகவும் தீவிரமான பாதிப்பு உள்ளவர்கள் முகம், கைகள், மார்பு மற்றும் பிறப்புறுப்புகளில் புண்கள் ஏற்படலாம்..
ஆப்பிரிக்காவில் என்ன நடக்கிறது?
ஆப்பிரிக்காவின் குரங்கு அம்மை பாதிப்பின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறைந்த பட்சம் 13 ஆபிரிக்க நாடுகளில் இப்போது mpox கண்டறியப்பட்டுள்ளதாக கடந்த வாரம் ஆப்பிரிக்க நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், பாதிப்பு 160% அதிகரித்துள்ளதாகவும், இறப்புகள் 19% அதிகரித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், காங்கோ சுரங்க நகரத்தில் 10% மக்களைக் கொல்லக்கூடிய மற்றும் எளிதாகப் பரவக்கூடிய mpox -ம் புதிய மாறுபாடு உருவானதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த மாறுபாடு பிறப்புறுப்புகளில் புண்களையும் ஏற்படுத்துகிறது. மேலும் இந்த பாதிப்பு இருக்கிறதை என்பதை கண்டுபிடிப்பதும் கடினம். தங்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்பது தெரியாது என்பதால் இது எளிதாக மற்றவர்களுக்கும் பரவலாம்.
வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!
புருண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா ஆகிய 4 கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் சமீபத்தில் முதன்முறையாக mpox கண்டறியப்பட்டதாக WHO தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கா மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் இந்த நோய் மேலும் பரவுவது குறித்து கவலை இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
அவசரகால அறிவிப்பு என்றால் என்ன?
WHO இன் அவசரகால அறிவிப்பு, நன்கொடை வழங்கும் முகவர் மற்றும் நாடுகளை எச்சரிக்கும் செயல்முறையாகும். ஆப்பிரிக்காவின் CDC இயக்குநர் ஜெனரல் டாக்டர். ஜீன் கசேயா இதுகுறித்து பேசிய போது “ உலக சுகாதார அமைப்பின் பொது சுகாதார அவசரநிலை அறிவிப்பால் நாங்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகிறோம். ஆப்பிரிக்காவின் நட்பு நாடுகளிடம் உதவி கேட்டுள்ளோம்.
ஆனால் ஆப்பிரிக்காவில் நோய் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. தற்போதைய கட்டுப்பாட்டு உத்திகள் வேலை செய்யவில்லை என்பது தெளிவாகிறது மற்றும் கூடுதல் ஆதாரங்களுக்கான தெளிவான தேவை உள்ளது" என்று தெரிவித்தார்.
2022 தொற்றுநோய்க்கும் தற்போதைய பரவலுக்கும் என்ன வித்தியாசம்?
2022 ஆம் ஆண்டில் உலகளவில் mpox பரவிய போது, ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் இருபாலின ஆண்களே பெரும்பாலான பாதிப்புகளை உருவாக்கினர். மேலும் இந்த வைரஸ் பெரும்பாலும் பாலினம் உட்பட நெருங்கிய தொடர்பு மூலம் பரவியது. ஆனால் இப்போது 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் காங்கோவில் 70% க்கும் அதிகமான mpox பாதிப்புகள் மற்றும் 85% இறப்புகளுக்கு காரணமாக உள்ளனர்.
வெறும் நாலரை மணி நேரத்திற்குள் பக்கவாதத்தை சுலபமாக வெல்லலாம் தெரியுமா?
mpox பரவலை எப்படி தடுப்பது?
2022 ஆம் ஆண்டில் பல நாடுகளில் பரவிய mpox நோய்த்தொற்று தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் பயன்படுத்துவதன் மூலம் பெரும்பாலும் நிறுத்தப்பட்டது. ஆனால் ஆப்பிரிக்காவில் எந்த தடுப்பூசிகளும் சிகிச்சைகளும் கிடைக்கவில்லை. எனினும் பெரியம்மை நோய்க்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி போடுவது உட்பட மருந்துகள் மூலம் இந்த நோயை தடுக்க முடியும்.
தடுப்பூசி நன்கொடைகள் குறித்து நன்கொடையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிடமிருந்து சில நிதி உதவிகளைப் பெற்றுள்ளதாகவும் காங்கோ கூறியுள்ளது. WHO ஏற்கனவே அதன் அவசர நிதியிலிருந்து 1.45 மில்லியன் டாலரை ஆபிரிக்காவில் mpox தடுப்பு நடவடிக்கைகளுக்கு விடுவித்துள்ளது, ஆனால் ஆப்பிரிக்காவில் நோயை ஒழிக்க 15 மில்லியன் தேவை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.