Vazhakkai Varuval Recipe : இந்த கட்டுரையில் இந்த கட்டுரையில் வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
எல்லா வகையான கிரேவி மற்றும் குழம்பு, சாம்பார் ஆகியவற்றிற்கு பெஸ்ட் சைடு டிஷ் எதுவென்றால், அது வாழைக்காய் வறுவல் தான். அதுமட்டுமின்றி, இந்த வாழைக்காய் வறுவலை எலுமிச்சை சாதம், புளி சாதம் போன்ற சாதத்துடன் வைத்தும் சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். மேலும், நீங்கள் இந்த வாழைக்காய் வறுவலை நீங்கள் ஈவ்னிங் டைம்ல ஸ்நாக்ஸ் ஆகவும் செய்தும் சப்பிடலாம். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த வாழைக்காய் வறுவல் செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: நெத்திலி கருவாடு வறுவல்.. இப்படி செஞ்சி சாப்பிடுங்க.. டேஸ்டா இருக்கும்!
undefined
வாழைக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 2 ( தோல் நீக்கி, துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்)
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கடலை மாவு - 2 ஸ்பூன்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: எண்ணெய் குடிக்காத மொறு மொறு காலிபிளவர் 65 .. ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!
செய்முறை:
வாழைக்காய் வறுவல் செய்ய முதலில் ஒரு ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்த வாழ காயை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அதில் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கடலை மாவு, அரிசி மாவு, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து சுமார் 10 நிமிடம் ஊறவைத்து கொள்ளுங்கள். இப்போது ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் குறிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வாழைக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொறுத்து எடுக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் வாழைக்காய் வறுவல் ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D