Vendakkai Puli Kulambu Recipe : இந்த கட்டுரையில் வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மதியம் சாதத்திற்கு காரசாரமான குழம்பு ஏதாவது சாப்பிட விரும்புகிறார்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் வெண்டைக்காய் இருந்தால் அதை வைத்து காரசாரமான சுவையில் வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த குழம்பு செய்வதற்கு ரொம்பவே சுலபமாக இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: கறி குழம்பு சுவையை மிஞ்சும் சைவ கறி குழம்பு.. ஒருமுறை செய்ங்க அடிக்கடி செய்வீங்க!!
undefined
வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 1/4 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
காயந்த மிளகாய் - 2
புளி - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
குழம்பு மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: கோழி குழம்பு சுவையில் கருப்பு கொண்டைக்கடலை குழம்பு... இப்படி செஞ்சு அசத்துங்க!
செய்முறை:
முதலில் எடுத்து வைத்த வெண்டைக்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பின் வெண்டைக்காயை அதில் சேர்த்து, சுமார் இரண்டு நிமிடம் வதக்கி, பின் அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதை கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி மசிந்தவுடன் அதில் புளி கரைசல், உப்பு, குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின் இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அதில் வேக வைத்துள்ள வெண்டைக்காயை சேர்க்கவும். குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பு அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் காரசாரமான சுவையில் வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி. சூடான சாதத்திற்கு இந்த குழம்பு ஊத்தி சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D