Kollu Chutney Recipe : இந்த கட்டுரையில் கொள்ளு சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்று உங்கள் வீட்டில் காலை உணவுக்கு இட்லி எழுது தோசை செய்ய போறீங்களா? இதற்கு சைடிஷாக எப்போதும் ஒரே மாதிரி தான் ஒரே மாதிரியான சட்னி வைத்து சாப்பிட்டு போரடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில், விரைவில் செய்து முடிக்க கூடிய, கூடவே சத்தான ஏதாவது சட்னி செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கான பதிவு தான் இது.
உங்கள் வீட்டில் கொள்ளு இருக்கிறதா? அப்படியானால் அதில் சாப்பிடுவதற்கு ருசியாகவும், ஆரோக்கியமான இருக்கும் கொள்ளு சட்னி செய்து சாப்பிடுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த சட்னி ரொம்பவே நல்லது. சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் கொள்ளு சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
undefined
இதையும் படிங்க: இட்லி தோசைக்கு ஒரு முறை இந்த சட்னி வச்சி கொடுங்க.. எக்ஸ்ட்ரா ரெண்டு சாப்பிடுவாங்க..!
கொள்ளு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 5 (விரும்பினால் பயன்படுத்துங்கள்)
தக்காளி - 1
பூண்டு - 6
சீரகம் - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
புளி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: இட்லி தோசைக்கு அட்டகாசமான சின்ன வெங்காய சட்னி.. ரெசிபி இதோ!
செய்முறை:
கொள்ளு சட்னி செய்ய முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எடுத்து வைத்த கொள்ளு, தக்காளி இரண்டையும் சேர்க்கவும். பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், சீரகம், தனியா, பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் வேகவைத்து எடுத்த கொள்ளு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் பூண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இவற்றை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். பின் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இதனுடன் புளி மற்றும் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அரைத்த சட்னியை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள். பின் அதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவவும். அவ்வளவுதான் சத்தான கொள்ளு சட்னி ரெடி. இந்த சட்னியை நீங்கள் இட்லி தோசை மட்டுமின்றி, சூடான சாதத்திற்கு கூட வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
முக்கிய குறிப்பு : நீங்கள் சட்னியை அரைக்கும் போது, கொள்ளு தக்காளி சேர்த்து வேக வைத்து நீரை பயன்படுத்தி அரைக்கவும். மேலும், நீங்கள் 5 சின்ன வெங்காயத்தை அரைக்கும் போது பயன்படுத்தினால் சுவை அருமையாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D