உருளைக்கிழங்கு வச்சு லஞ்ச் பாக்ஸ்க்கு இப்படி ஒருமுறை ரெசிபி செஞ்சு கொடுங்க.. செம டேஸ்டா இருக்கும்!

By Kalai Selvi  |  First Published Aug 12, 2024, 2:27 PM IST

Potato Rice Recipe  : கட்டுரையில் உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு இருக்கிறதா? அப்படியானால் அதில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு உருளைக்கிழங்கு சாதம் செய்து கொடுங்கள். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு மிகவும் ஈசியாகவும் இருக்கும். இந்த ரைஸை நீங்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக லஞ்ச் பாக்ஸில் அடைத்து கொடுங்கள், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த ரெசிபியை அலுவலகம் செல்பவர்களும் செய்து கொடுக்கலாம். முக்கியமாக பேச்சிலர்களும் இந்த ரெசிபி ஏற்றது. சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க:  காரசாரமான சுவையில் உருளைக்கிழங்கு வறுவல்.. ஒருமுறை இப்படி செய்ங்க.. டேஸ்ட்டா இருக்கும்!

Latest Videos

undefined

உருளைக்கிழங்கு சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

சாதம் - 1 கப்
உருளைக்கிழங்கு - 1 (பெரியது)
பெரிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
நெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லியிலே - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

இதையும் படிங்க:  10 நிமிடத்தில் உருளைக்கிழங்கில்  மொறுமொறுனு ஈவ்னிங் ஸ்நாக்ஸ்..  உடனே செஞ்சி பாருங்க..!

செய்முறை:

உருளைக்கிழங்கு சாதம் செய்ய முதலில் சாதத்தை தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பெரிய பெரிய உருளைக்கிழங்கை எடுத்து அதன் தோலை நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக விட்டுக் கொள்ளுங்கள். பிறகு அதை தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் வெட்டி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் அதில் எடுத்து வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். பிறகு ஒரு நிமிடம் வேகவைத்து விட்டு அதில் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை சாதத்தின் மேலே தூவுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் நெய்யையும் சாதத்தின் மேல் ஊற்றி சாதத்தை ஒருமுறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் உருளைக்கிழங்கு சாதம் தயார். இந்த உருளைக்கிழங்கு சாதத்துடன் காலிஃப்ளவர் 65, கத்தரிக்காய் வறுவல் சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!