Nethili Karuvadu Fry Recipe : இந்த கட்டுரையில் நெத்திலி கருவாடு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
நீங்கள் கருவாட்டு பிரியரா? அப்படியானால் உங்களுக்காக ஒரு சூப்பரான ரெசிபி கொண்டு வந்துள்ளோம். உங்கள் வீட்டில் நெத்திலி கருவாடு இருக்கிறதா? அப்படியானால் அதில் வறுவல் செய்து சாப்பிடுங்கள். இந்த வறுவல் சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். எனவே, ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நெத்திலி கருவாடு வைத்து வரும் செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் நெத்திலி கருவாடு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: பக்கத்து தெரு வரை மணமணக்கும் நெத்திலி கருவாடு தொக்கை இப்படி செஞ்சா, சமைத்தவருக்கு ஒன்னுமே மிஞ்சாது!
undefined
நெத்திலி கருவாடு செய்ய தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
பூண்டு - 5 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 3/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
நல்லெண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: வீடே மணக்கும் கிராமத்து கருவாட்டு குழம்பு... ஒருமுறை செய்ங்க.. திரும்பத் திரும்ப செய்வீங்க!
செய்முறை:
நெத்திலி கருவாடு செய்ய முதலில் எடுத்து வைத்த கருவாடை வெந்நீரில் போட்டு சுமார் ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். பிறகு பிறகு அதை நன்றாக சுத்தம் செய்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயத்தின் நிறம் மாறியவுடன் அதில் நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு மசிந்ததும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். கருவாட்டில் ஏற்கனவே உப்பு இருப்பதால் உப்பு சேர்க்கும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.
இப்போது இதில் கழுவி வைத்த கருவாட்டையும் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். பிறகு ஒரு தட்டை வைத்து பாத்திரத்தை மூடி வைக்கவும். அவ்வப்போது மூடிய திறந்து கருவாடை கிளறி விடுங்கள். கருவாடு மொறுமொறுப்பாக மாறியவுடன் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் டேஸ்ட்டான நெத்திலி கருவாட்டு வறுவல் ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D