இன்னைக்கும் அரிசி மாவு தோசை தான் சுட போறீங்களா? ஒருமுறை இந்த தோசை சுட்டு பாருங்க.. சுவையா இருக்கும்!

Published : Aug 10, 2024, 06:30 AM IST
இன்னைக்கும் அரிசி மாவு தோசை தான் சுட போறீங்களா? ஒருமுறை இந்த தோசை சுட்டு பாருங்க.. சுவையா இருக்கும்!

சுருக்கம்

Pori Dosai Recipe : இந்த கட்டுரையில் பொரி தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இன்னைக்கு காலையில உங்க வீட்டில் உள்ளவர்களுக்கு தோசை செய்து கொடுக்கப் போறீங்களா. எப்போதும் ஒரே மாதிரியாக தோசை செய்து கொடுக்காமல் ஒருமுறை வித்தியாசமான சுவையில் செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், அப்படி என்ன தோசை செய்வது என்று தெரியவில்லையா? உங்களுக்கான பதிவு தான் இது.

உங்கள் வீட்டில் பொரி இருக்கிறதா? அப்படியானால் கோதுமை மாவு தயிரும் சேர்த்து சுவையான தோசை செய்யுங்கள். இந்த பொரி தோசை சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் பொரி தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க:  மீல் மேக்கரில் இப்படி ஒரு முறை தோசை சுட்டு சாப்பிடுங்க ... அடிக்கடி செய்வீங்க!

பொறி தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள்:

பொரி - 2 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
தயிர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  சத்தனான மொறு மொறு பச்சை பயிறு தோசை.. ரெசிபி இதோ!

செய்முறை:
இந்த தோசை செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் பொரி போட்டு அதில் தண்ணீர் ஊற்றூத் சுமார் 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அதில் இருந்து தண்ணீரை வடிகட்டி, ஊறவைத்த பொறியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும். பிறகு அதனுடன் கோதுமை மாவு தயிர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அறுத்த இந்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலக்கவும். இப்போது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் தடவி, தயாரித்து வைத்த மாவை ஒரு கரண்டி எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி, இரண்டு பக்கமும் நான்கு வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் ருசியான பொரி தோசை தயார். இந்த பொரி தோசைக்கு நீங்கள் தேங்காய் சட்னி, காரச் சட்னி, தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Green Tea Benefits: கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் 7 சூப்பர் நன்மைகள்!
Growing Garlic: வீட்டில் பூண்டு வளர்ப்பது எப்படி? ரொம்ப ஈஸி தெரியுமா?