அடிக்கடி தசை வலி, உடல் சோர்வு ஏற்படுகிறதா? உஷார்... மெக்னீஷியம் குறைபாடாக இருக்கலாம்..!!

By Dinesh TGFirst Published Sep 21, 2022, 8:18 AM IST
Highlights

மனித உடலுக்கு வைட்டமின், இரும்புச்சத்து போலவே மெக்னீஷியத்தின் தேவையும் முக்கியமாக உள்ளது. ஆனால் நம்மில் பலருக்கும் இதன்மீது பெரியளவில் கவனம் இருப்பது கிடையாது. இது உடல்நலனுக்கு தேவைப்படுகிற முக்கிய ஊட்டச்சத்தாகும். இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மெக்னீஷியம் முக்கிய பங்கு வகிக்கிறது. பலரும் இந்த சத்துக்கு முன்னுரிமை அளித்து தங்களுடைய டயட்டை நிர்வாகம் செய்வது கிடையாது. அவர்களுக்கு உதவக்கூடிய நோக்கில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் மெக்னீஷியம் முதன்மையாக கிடைக்கக்கூடிய 5 உணவு வகைகளை குறித்து விரிவாக பார்க்கலாம்.
 

பாதாம்

மனிதனின் உடல்நலனுக்கு பாதாமின் பங்கு அளப்பரியது தான். மற்ற நட்ஸை விடவும் பாதாம் நமது உடலுக்கு உடல்நலனை அதிகளவில் கூட்டி தருகிறது. புரதம் மற்றும் நல்ல கொழுப்பை பெறுவதற்கு தினமும் பத்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வருவது உடலுக்கு நன்மையை தரும். ஒரு கைப்பிடி அளவு பாதாமில் 80 கிராம் அளவுக்கு மெக்னீஷியம் உள்ளது. 

அவகேடோ

இருதய நோய் வராமல் பாதுகாக்கும் தன்மை கொண்ட அவகேடோவில் 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உடலில் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் கொண்டு வரவும் உதவும்.  ஒரு சிறிய அளவு அவகேடோவில் 44 மில்லிகிராம் அளவு மெக்னீஷியம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அருகில் இருப்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், முதலில் என்ன செய்ய வேண்டும்? வழிமுறைகள் இதோ..!!

வாழைப்பழம்

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று வாழைப்பழம். ஒரு வாழைப்பழத்தில் மட்டும் 37 மி.கிராம் மெக்னீஷியம் இருப்பதாக கூறப்படுகிறது. இதை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, உடலில் சக்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். மேலும் இருதய நோய் பாதிப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

பித்ரு பட்ச மாதத்தில் குழந்தை பிறப்பது நன்மையா..?? தீமையா...??

சிவப்பு அரிசி

இன்று உடல்நலன் சார்ந்து சிந்தித்து இயங்கும் பலருக்கும் சிவப்பு அரிசியின் நன்மை தெரிந்திருக்கிறது. தினமும் சிவப்பு அரிசி சாப்பிடுவதன் காரணமாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் இருக்கும். மேலும் செரிமானம் கோளாறு ஏற்படுவதை தடுக்கிறது. புற்றுநோய் பாதிப்பை எதிர்த்து போராடும் தன்மை இதற்கு உள்ளது. 100 கிராம் பழுப்பு அரிசியில் குறைந்தது 43 மில்லிகிராம் அளவுக்கு மக்னீசியத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 

click me!