Pallkova : சுவையான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா! நாமளே செய்வோமா?

By Dinesh TGFirst Published Sep 19, 2022, 10:07 AM IST
Highlights

இனிப்பு வகைகளில் தவிர்க்கமுடியாதது பால்கோவா, சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பால்கோவாவை ( Pal kova ) ஈசி யாக செய்யலாம்.
 

பாலில் புரதம் அதிகம் உள்ளதால் அதை எந்த விதத்திலும் எடுத்துக் கொள்ளாம். பாலில் இருந்து பல வகையான இனிப்புகள் மற்றும் உணவு வகைகள் செய்யலாம். அதில் ஒன்று தான் பால்கோவா . பால்கோவை நாம் பண்டிகை அல்லது விஷேஷ நாட்களில் கடைகளில் இருந்து சுவைத்து இருப்போம். ஆனால் இன்று நாமே வீட்டிலேயே சுவையாக மற்றும் சுகாதாரமாக செய்யலாம்.

பொதுவாக பால்கோவா செய்ய நாம் பாக்கெட் பாலை விட பசும்பால் அல்லது எருமைப் பால் பயன்படுத்தலாம். பசும்பால் பயன்படுத்தினால் சுவை அதிகமாக இருக்கும் மேலும் நிறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எருமைப்பாலில் செய்தால் கெட்டியாகவும் வெள்ளை நிறத்திலும் இருக்கும்.

பாரம்பரியமிக்க பால்கோவா செய்ய பால், சர்க்கரை, லெமன் ஜூஸ், ஏலக்காய் பொடி ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. பால்கோவா செய்வதற்கு 2 லிட்டர் பாலுக்கு, 2 மணி நேரம் ஆகும். இது சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். நீங்களும் பாரம்பரியமிக்க பால்கோவா செய்து ருசித்து எஞ்சாய் பண்ணுங்க. பதிவில் சுவையான பால்கோவாவை செய்வது எப்படி என்று பார்ப்போம். முதலில் அதற்கு தேவையான பொருட்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

Saffron Benefits : சிவப்பு தங்கம் ''குங்கும்ப்பூ''-வின் நன்மைகள் Vs தீமைகள்!

பால்கோவா செய்ய தேவையான பொருட்கள்:

2 லிட்டர் பால்
200 கிராம் சர்க்கரை
லெமன் ஜூஸ் சிறிது
½ தேக்கரண்டி - ஏலக்காய் பொடி(ஆப்ஷனல்)
1 தேக்கரண்டி - நெய்

கர்ப்பிணிப் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் '''ஈரல் வறுவல்''!!

பால்கோவா செய்யும் முறை:



ஒரு கனமான விலாசமான அடி பிடிக்காத பாத்திரத்தில் 2 லிட்டர் அளவு பாலை சேர்த்து சூடாக்கவும். அடி பிடிக்காமல் இருப்பதற்கு அவ்வப்போது கிளறி விட வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு பால் சுண்டி வந்து பாதி அளவாக ஆகும் . பின்பு மிதமான சூட்டில் வைத்து கிளரிக் கொண்டே இருக்க வேண்டும்.
அதன் பின் ஒரு லெமனைப் பிழிந்து அதன் சாறை பாலுடன் சேர்க்கவும். பால் இப்போது திரிந்து வருவதை பார்க்கலாம். பால் பிரிந்த பிறகு, 200 கிராம் அளவு சர்க்கரை மற்றும் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்க்கவும். சர்க்கரை கரையும் வரை மிக்ஸ் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

Crab Cutlet : நா ஊறும் நண்டு கட்லெட்!

சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு பால் நன்கு சுண்டி திரண்டு வருவதை பார்க்கலாம் . இப்போது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி விட வேண்டும் . பால்கோவா ஒன்றாக சேர்ந்து வரும் பொழுது அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும்.

நெய் தடவிய ஒரு பெரிய தட்டில் பால்கோவாவை போட்டு, ஒரு ஸ்பூனால் அழுத்தி விடவும். ஆறு முதல் மணி ஏழு நேரங்களுக்கு அப்படியே வைக்கவும். பின்பு
சிறுசிறு துண்டுகளாக வெட்டி பால்கோவாவை பரிமாறலாம். அவ்ளோதாங்க சுவையான மற்றும் இனிப்பான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ரெடி . இனி வீட்டின் அனைத்து விசேஷங்களுக்கும் நீங்களே பால்கோவா செய்து அசத்துங்க.

click me!