பாதம் மில்க் , ரோஸ் மில்க் தெரியும் . இது என்ன கோல்டன் மில்க்? அப்படின்னு நினைக்குறீங்களா? வாங்க என்னவென்று தெரிந்து கொள்ளலாம். மஞ்சள் கலந்த பாலை தான் கோல்டன் மில்க் என்கிறோம்.
கோல்ட்டின் விலை எவ்ளோ அதிகம் என்பது நமக்கு தெரியும். அது மாதிரி தான் கோல்டன் மில்க்கின் பயன்களும் அதிகமோ அதிகம் ஆனால் குறைவான செலவில், குறைந்த நேரத்தில், அதிக நன்மைகளை கொண்டுள்ள இந்த கோல்டன் மில்க்கை (மஞ்சள் பால்) பற்றி தான் இன்றைய பகுதியில் பார்க்க போகிறோம்.
மஞ்சளானது நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதோடு மட்டும் அதன் பயன் நிற்பதில்லை. மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டி-பயாடிக் பண்புகளை கொண்டுள்ளன. நம் அன்றாட உணவில் இந்த இரு பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம்.
இந்த கோல்டன் மில்க் மார்பகம், சரும, நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கிறது மற்றும் நிறுத்தவும் செய்கிறது. மேலும் நல்ல அமைதியான மற்றும் நிம்மதியான தூக்கத்தைத் தூண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக கருதப்படக் காரணம், அதன் நச்சுயிரிக்கு எதிரான குணமும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் ஆகும். இது தொண்டைப் புண், சளி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது. இன்னும் பற்பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது இந்த கோல்டன் மில்க்.
Wheat Noodles : குழந்தைகளுக்கான ஹெல்த்தியான டேஸ்ட்டியான ''கோதுமை நூடுல்ஸ்''!
வாங்க கோல்டன் மில்க் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ஒரு கிளாஸ் - பால்
ஒரு ஸ்பூன் - மஞ்சள்
ஒரு சிட்டிகை - மிளகுத் தூள்
ஒரு சிட்டிகை - பட்டை பொடி
ஒரு ஸ்பூன் - தேன்
வாரத்திற்கு ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து பாருங்க: அப்புறம் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
செய்முறை
அடுப்பில் ஒரு கிண்ணத்தை வைத்து அதில் ஒரு கிளாஸ் பாலை ஊற்றி மிதமாக சூடு செய்து கொள்ளுங்கள். அதன் பின் மஞ்சள் தூள் , மிளகு தூள், பட்டை பொடி மற்றும் துருவிய இஞ்சியை சேர்க்கவும.. இவை அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்யவும். பின் 2 நிமிடம் மிதிமான தீயில் பாலை வைத்து கொதிக்க வைக்கவும்.பின் பாலை வடிகட்டி தேன் கலந்தால் மருத்துவ குணம் நிறைந்த கோல்டன் மில்க் தயார். (தேனிற்கு பதிலாக நாட்டு சக்கரை கூட சேர்த்து பருகலாம். ) தினமும் இந்த கோல்டன் மில்க்கை பருகி நல்ல ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.
உணவே மருந்து . மருந்தே உணவு என்பதற்கு இந்த கோல்டன் மில்க் மிக சரியான சான்று.