Milk : பெண்களுக்கான ஒரே வரப்பிரசாதம் - பருத்தி பால்! - எளிய செய்முறை!

By Dinesh TGFirst Published Sep 19, 2022, 9:03 AM IST
Highlights

பருத்தியில் இருந்து ஆடைகள் உற்பத்தி செய்யலாம் என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அது போல பருத்தியைப் பயன்படுத்தி பல்வேறு நோய்களிலிருந்து விடுபடுலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
 

பொடுகு மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளிருந்தும் , செரிமான பிரச்சனைக்கும் அரு மருந்தாக பருத்திப்பால் பயன்படுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரக்க பயன்படுகிறது. அது மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான சக்தியையும் தருகிறது. பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும் வல்லமை கொண்டுள்ளது இந்த பருத்தி விதை. இப்போ வாங்க பருத்தி விதையை வைத்து எப்படி பருத்திப்பால் செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பருத்தி விதை 100 கிராம் (8 மணி நேரம் ஊற வைத்தது)
வெள்ளம் 1 /4 கிலோ
சுக்கு சிறிதளவு
ஏலக்காய் 5
பச்சரிசி 4 ஸ்பூன் (1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்)
தேங்காய் துருவல் 4 ஸ்பூன்

ரோட்டு கடை இட்லி தோசை குருமா! இப்படி குருமா வச்சு பாருங்க. 10 இட்லி கூட சாப்பிடலாம்!



செய்முறை :

ஊற வைத்துள்ள பருத்தி விதைகளை நீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு மை போல் அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் அதனை வாடி கட்ட வேண்டும் . மீண்டும் வடிகட்டிய சக்கைகளை மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ள வேண்டும் . வடிகட்டின பருதி பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி சூடு செய்ய வேண்டும்.
இப்போது சுக்கு மற்றும் ஏலக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுற்று அரைத்துக் கொள்ள வேண்டும். பால் நன்கு கொதிக்கும் வேளையில் குறைந்த தீயில் இட்டு பாலை அடிபிடிக்காமல் இருக்க கலக்கி கொண்டே இருக்க வேண்டும். வேளையில் ஊற வைத்துள்ள பச்சரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு கொர கொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

Moon Milk : இரவில் தூக்கம் வரவில்லையா? ஆழ்ந்த உறக்கம் வர வைக்கும் "MOON MILK''!


அரைத்த பச்சரிசியை கொதிக்கும் பாலில் கலந்து விட வேண்டும். இப்போது பால் அடர்த்தியாக அல்லது கெட்டியாக மாறும் . இந்நிலையில் வெல்லத்தை சிறு துண்டுகளாக செய்து சேர்க்க வேண்டும் . பிறகு அரைத்த சுக்கு , ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து விட்டால் சுவையான மற்றும் ஆரோக்கியமான பருத்திப்பால் ரெடி!

இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்துக் குடித்தால் அதன் சுவையே தனி சுவை தான் போங்க. எங்கேங்க போறீங்க? பருத்தி வாங்க கிளம்பிட்டீங்களா?

click me!