Cervical Cancer: பெண்களே உஷார்: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை வருமுன்னரே எப்படித் தடுக்கலாம்?

By Dinesh TGFirst Published Nov 7, 2022, 7:44 PM IST
Highlights

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வோடு இருப்பது மிகவும் அவசியமாகும். அவ்வகையில் இப்புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன? இதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து காண்போம்.      

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இது பெரும்பாலும் 30 வயதிற்கும் மேற்பட்ட பெண்களுக்குத் தான் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்த வகைப் புற்றுநோய், ஹியூமன் பாப்பிலோமா எனும் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இதனை எளிதாக நீக்குவது, மிகவும் கடினமான ஒன்றாகும். ஆகவே, பெண்கள் அனைவரும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வோடு இருப்பது மிகவும் அவசியமாகும். அவ்வகையில் இப்புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன? இதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து காண்போம்.      

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்

நம் உடலில் செல்கள் தோன்றி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் இறந்து விடும். இருப்பினும், கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் வைரஸ்த் தொற்று காரணமாக செல்கள் உற்பத்தியாகும். ஆனால், இவை இறப்பது இல்லை. இதன் காரணமாக மிக அதிகளவில் செல்கள் உருவாகி கொண்டே இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல இந்த செல்களின் உருவாக்கம், மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. இதையே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்கிறோம்.

எவ்வளவு நாட்களில் ஏற்படும்? 

ஆணிடமிருந்து வைரஸ் தொற்று, பெண்ணுக்கு  பரவினால் உடனே புற்றுநோய் ஏற்படாது. வைரஸ் தொற்று புற்றுநோயாக மாற்றம் பெற குறைந்தது பத்து ஆண்டுகள் ஆகும். 

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள்

தொடக்க நிலையில் புற்றுநோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. பாதிப்பு கொஞ்சம் தீவிரமாகும் நிலையில், ஆண் பெண் தாம்பத்திய உறவுக்குப் பின்னர் பிறப்புறுப்பில் இரத்தக் கசிவு‌ மற்றும் வெள்ளைப்படுதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மாதவிலக்கு சமயத்தில் இரத்தப் போக்குடன், துர்நாற்றமும் வீசும். 

Eating Rice: வெறும் அரிசியை சாப்பிட்டால் ஏற்படும் தீமைகள் என்னென்ன தெரியுமா?

காரணங்கள்

  • பெண்கள், இளம் வயதிலேயே தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வது.
  • பெண்கள், பலருடன் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வது.
  • வேறு பாலியல் நோய்த் தொற்றுகள் இருப்பது.
  • புகைப்பழக்கம் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாவது.
  • நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருத்தல்.

தடுக்கும் வழிமுறைகள்

  • பெண்கள் 21 வயதைக் கடந்த பிறகு, வருடத்திற்கு ஒரு முறை பாப்ஸ்மியர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
  • பெண்கள், மகப்பேறு மருத்துவரை கலந்தாலோசித்து, புற்றுநோய்க்கான தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
  • அதிக பாதுகாப்புடன் உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைத்து விடலாம்.
click me!