தாபா ஸ்டைலில், பன்னீர் மசாலா ரெசிபியை சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
எப்படி ரெஸ்டாரண்ட் உணவகங்களில் உணவுகள் ஒரு தனித்துவமான டேஸ்டுடன் இருக்கிறதோ, அதே போல் தாபா உணவகங்களிலும், உணவுகள் ஒரு தனித்துவமான டேஸ்ட் கொண்டிருக்கும்.
இதற்கு முக்கிய காரணம் அதில்,சேர்க்கப்படும் மசாலாவானது பிரெஷாக அரைத்து செய்யப்படுவதே ஆகும். அந்த வகையில் நாம் வீட்டில் பிரெஷாக மசாலா அரைத்து, தாபா ஸ்டைலில், பன்னீர் மசாலா ரெசிபியை சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
undefined
தாபா ஸ்டைலில் பன்னீர் மசாலாவானது, நாண் ,பரோட்டா, சப்பாத்தி , புல்கா என்று அனைத்து விதமான ரொட்டி வகைகளுக்கும் சிறந்த சைடு டிஷ்ஷாக இருக்கும்.
தாபா மசாலா பொடி செய்வதற்கு :
மிளகு - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
லவங்கம் - 3
ஏலக்காய் - 2
பெருஞ்சீரகம் - 1/2 ஸ்பூன்
பட்டை - 1/2 இன்ச்
ஊற வைப்பதற்கு:
பன்னீர் - ஒரு கப்
பட்டர் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கிரேவி செய்வதற்கு:
பட்டர் - 2 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 2
பட்டை - 1 இன்ச்
லவங்கம் - 2
சீரகம் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 2
தயிர் - 1/2 கப்
கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி 1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
நெய்-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
குட்டிஸ்கள் விரும்பும் "மஸ்ரூம் சீஸ் பாப்பர்ஸ்" -தட்டில் வைத்த அடுத்த நிமிடம் காலி ஆகி விடும்!
செய்முறை:
முதலில் பன்னீரை சிறிய ஒரே மாதிரியான பீஸ்களாக வெட்டிக் கொண்டு அதனை ஒரு பெரிய பௌலில் போட்டு கொள்ள வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து பட்டர் போட்டு, உருகிய பின்பு, ஊற வைத்துள்ள பன்னீர் பீஸ்களை போட்டு கொஞ்சம் வறுத்துக் கொண்டு, தனியாக ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் அதே கடாயை வைத்து, சிறிது எண்ணெய் சேர்த்து, அடுப்பின் தீயனை சிம்மில் வைத்து, மிளகு,சீரகம், தனியா,லவங்கம், ஏலக்காய்,பெருஞ்சீரகம், பட்டை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்துக் கொண்டு, அடுப்பினை ஆஃப் செய்து விட்டு, இதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு பெரிய அடிகனமான கடாய் வைத்து, சிறிது நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின், பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து கொண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொண்டு, பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் அரைத்து எடுத்து வைத்துள்ள தாபா மசாலா பொடி சேர்த்து கிளறி விட்டு, பின் அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பின் தீயனை சிம்மில் வைத்து வதக்கி விட்டு, அதன் பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கி விட்டு,தயிர் சேர்த்து, எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
இப்போது தண்ணீர் ஊற்றி கொண்டு, கிளறி விட்டு, பன்னீர் பீஸ்களை சேர்த்து கிளறி, ஒரு தட்டு போட்டு மூடி, அடுப்பினை சிம்மில் வைத்து, நன்றாக கொதிக்கும் போது, கஸ்தூரி மேத்தி, மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி விட்டு இறக்கினால், அசத்தலான சுவையில் தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா ரெடி!