அரைத்த மசாலாவின் வாசனையில் கமகமவென்று வீடே மணக்கும் "சேலத்து மீன் குழம்பு" செய்யலாம் வாங்க

By Dinesh TGFirst Published Nov 7, 2022, 1:07 PM IST
Highlights

சுவையான சேலம் ஸ்டைலில் மீன் குழம்பு எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 
 

நம்மில் பெரும்பாலோனோர் சண்டே என்றாலே சிக்கன், மட்டன், மீன் என்று அசைவம் தான் சாப்பிடுவோம். அந்த வகையில் இன்று நாம் மீன் வைத்து, மணக்க மணக்க , சுவையான சேலம் ஸ்டைலில் மீன் குழம்பு எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

வஞ்சரம் மீன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
பூண்டு - 8 பற்கள் 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு 
வெந்தயம் - 1 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - தேவையான அளவு 

வதக்கி அரைப்பதற்கு :

சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
பூண்டு - 10 பற்கள் 
தேங்காய் - 1/4 கப் 
மிளகு - 1ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 2 ஸ்பூன் 
தனியா தூள் - 1 ஸ்பூன் 

தாளிப்பதற்கு:

வெந்தயம் - 1/4 ஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது,
சீரகம் - 1/4 ஸ்பூன் 
எண்ணெய் -தேவையான அளவு 

குட்டிஸ்கள் விரும்பும் "மஸ்ரூம் சீஸ் பாப்பர்ஸ்" -தட்டில் வைத்த அடுத்த நிமிடம் காலி ஆகி விடும்!

செய்முறை:

முதலில் மீனை சுத்தம் செய்து விட்டு, பின் மீனில் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தேய்த்து, நன்றாக அலசிக் கொண்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் பூண்டை ஒன்றிரண்டாக அரிந்து கொள்ள வேண்டும். தக்காளியை மிக பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். புளியை ஒரு கிண்ணத்தில் போட்டு கொஞ்சம் நீர் ஊற்றி, புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பிறகு ,பூண்டு, மிளகு, சீரகம், வெங்காயம்,ஆகியவற்றை சேர்த்து போட்டு வதக்கி விட்டு, பின் அதில் துருவிய தேங்காய் மற்றும் தக்காளி சேர்த்து, அனைத்தும் நன்றாக வாசனை வரும் வதக்கி விட வேண்டும்.பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கிளறி விட்டு, அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.கலவை ஆறிய பிறகு, ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து மைப்போல் அரைத்து கொள்ள வேண்டும். இந்த விழுதை புளிக்கரைசலில் சேர்த்துக் கொண்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் இப்போது ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் ,சீரகம்,வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்.பின் அதில் பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி கொண்டு,மசாலா கலந்த புளிக்கரைசல் சேர்த்து சிறிது உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். குழம்பானது கெட்டியாக வரும் போது சுத்தம் செய்து வைத்துள்ள மீனை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மீன் வெந்த பின் . குழம்பில் வெந்தய தூள் சேர்த்து, அடுப்பில் இருந்து இறக்கி கொள்ள வேண்டும். 

இறுதியாக நல்லெண்ணெயை கொஞ்சம் சூடேற்றி அதனை குழம்பில் சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்ளோதான் அரைத்த மசாலாவின் வாசனையில் கமகமவென்று வீடே மணக்கும் "சேலத்து மீன் குழம்பு" ரெடி!

click me!