முருங்கைக்கீரையை பருப்புடன் சேர்த்து, அருமையான கூட்டு மிக சுலபமாக வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல், ஆறு மாதம் குழந்தைகள் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் தாய்ப்பாலில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளதால் , முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் தவிர வேற எந்த உணவும் எடுத்துக் கொள்ள தேவையில்லை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்,
தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, தாய்மார்களுக்கும், எதிர்காலத்தில் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.
undefined
சில பெண்களுக்கு சில பிரச்சனைகள் காரணமாக, குழந்தைகளுக்கு வேண்டிய அளவு தாய்ப்பால் சுரக்காமல், குறைந்த அளவே சுரக்கும் . அப்படிப்பட்டவர்கள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வீட்டிலேயே சமைத்து உண்டாலே போதும் இதனை சரி செய்து விட முடியும்.
அந்த வகையில், இன்று நாம் முருங்கைக்கீரையை பருப்புடன் சேர்த்து, அருமையான கூட்டு மிக சுலபமாக வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - 1 கட்டு
துவரம் பருப்பு - 1/4 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப்
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
சாம்பார் பவுடர் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 10
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 கீறியது
அரைக்க :
சீரகம் - 1/2 ஸ்பூன்
தேங்காய் - 4 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் முருங்கைக்கீரையை ஆய்ந்து கொண்டு, தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு ஒரு பாத்திரத்தில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து , எண்ணெய் சேர்க்காமல், பாசிப்பருப்பை நன்றாக வாசம் வரும் வரை பொன்னிறமாக வறுத்துக் கொண்டு, அதனை ஒரு குக்கரில் போட்டு, பின் அலசி வைத்துள்ள துவரம் பருப்பையும் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து, குக்கரை மூடி, 4 விசில் வந்த பின் அடுப்பில் இருந்து, இறக்கி விட்டு, விசில் அடங்கிய பிறகு, குக்கரை திறந்து , பருப்பினை நன்றாக மசிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு மிக்சி ஜாரில், சீரகம், தேங்காய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, மை போன்று அரைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
Facial wrinkles: கர்ப்ப காலத்தில் முக சுருக்கமா? இனி கவலையே வேண்டாம்: இதை ட்ரை பன்னுங்க!
அடுப்பில் ஒரு பெரிய கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த பிறகு, பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட்டு, பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து , சாஃப்டாக வரும் வரை வதக்கி விட்டு, அதனுடன் முருங்கைக்கீரை, சாம்பார் பவுடர் மற்றும் மஞ்சள் தூள் , சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட்டு,கீரைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து , சிறிது நீர் தெளித்து, கீரையை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
கீரை வெந்து, நிறம் மாறிய பிறகு, அதில் வேக வைத்து எடுத்துள்ள பருப்பு , அரைத்த தேங்காய் விழுது ஆகியவற்றை சேர்த்து , தீயினை சிம்மில் வைத்து நன்றாக கிளறி விட வேண்டும். இறுதியாக ஒரு பான் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, போட்டு தாளித்து விட்டு, பின் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு , கீரை கலவையில் சேர்த்து கிளறினால், சத்தான முருங்கைக் கீரை கூட்டு ரெடி!