இந்த சுவையான சேனைக்கிழங்கு வறுவலை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
கிழங்கில் சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சர்க்கரை வல்லிக் கிழங்கு, மரவல்லிக் கிழங்கு என்று வகைகள் உள்ளன. ஒவ்வொரு கிழங்கும் ஒரு தனித்துவமான சுவையை தரும். அந்த வகையில் இன்று நாம், சேனைக்கிழங்கினை வைத்து வறுவல் ரெசிபியை காண உள்ளோம்.இது சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு சூப்பராக இருக்கும்.
இந்த சேனைக்கிழங்கு வறுவலில் பலவகையான மசாலாக்கள் சேர்த்து செய்வதால், இதன் சுவையோ கறி சுவைக்கு நிகராக இருக்கும். கறி செய்து சாப்பிட முடியாத நாட்களில் இந்த மாதிரி செய்து பாருங்க. கறியே வேண்டாம் , இதனையே செய்து கொடுத்தால் போதும் என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லுவார்கள். சரிங்க இந்த சுவையான சேனைக்கிழங்கு வறுவலை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
undefined
தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு – 200 கிராம்
வெங்காயம் –1
தக்காளி – 1
தேங்காய் – 1/2கப் (துருவியது)
இஞ்சி பூண்டு விழுது –1 ஸ்பூன்
கசகசா – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
சோம்பு –1/2ஸ்பூன்
பட்டை- 1
லவங்கம் – 1
மல்லித்தூள்-1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் –1/4ஸ்பூன்
கரம் மசாலா தூள் –1 ஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
முதலில் சேனைக்கிழங்கின் தோல் சீவி, உள்ளே இருக்கும் கிழங்கினை தண்ணீரில் நன்றாக அலசி விட்டு, பின் ஒரே மாதிரியான வடிவங்களாக அரிந்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ,அதில் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, பாதி அளவு வேக வைத்துக் கொள்ள வேண்டும்,.
பாதி அளவு வெந்த பிறகு, அடுப்பை ஆஃப் செய்து விட்டு , தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொண்டு, பின் அதனை ஆற வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு மிக்சி ஜாரில், பட்டை, லவங்கம், கசகசா, சீரகம், சோம்பு மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு, ஒரு 2 சுற்று சுற்றிக் கொண்டு கோரா கொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின்,வேக வைத்து எடுத்துள்ள சேனைக் கிழங்கு துண்டுகளை பொரித்து எடுத்துக் கொண்டு அதனை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் இன்னொரு கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சூடான பின்பு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
சூப்பரான சுவையில் "கொங்குநாடு சிக்கன் சிந்தாமணி" இப்படி செய்து பாருங்க!
அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட்டு, பின் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து, தக்காளி நன்றாக மசியும் வரையில் வதக்கி விட வேண்டும். தக்காளி மசிந்த பிறகு, பொரித்து எடுத்து வைத்துள்ள சேனைக் கிழங்கு துண்டுகளை சேர்த்து,அதனுடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
பின்னர்,அந்த கலவையில் அரைத்த மசாலா சேர்த்து , நன்றாக பிரட்டி எடுத்தால் சூப்பரான சுவையில் சேனைக்கிழங்கு வறுவல் ரெடி!!