மீன் வறுவலை மிஞ்சும் சுவையில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்!

By Dinesh TG  |  First Published Nov 5, 2022, 10:28 PM IST

சுவையான சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் தெரிந்து கொள்ளலாம். 


கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான பயனை நமக்கு அளிக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் சர்க்கரை வள்ளிக் கிழங்கு வைத்து ஒரு ரெசிபி பார்க்க உள்ளோம். வழக்கமாக நம்மில் பலரும் இந்த கிழங்கினை அவித்து தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் சர்க்கரை வள்ளி கிழங்கனை வறுவல் செய்வது எப்படி என்று காண உள்ளோம். 

இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் ஆனது சாம்பார் சாதம் , குழம்பு சாதம்,தயிர் சாதம் போன்றவற்றிக்கு சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு சுவையை மட்டும் தராமல், ஆரோக்கியத்தையும் அள்ளி தருகிறது.அந்த வகையில் இந்த கிழங்கு இரத்தம் சுத்திகரிக்க ,இதயத்தை பாதுகாக்க , நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த ,சர்க்கரை அளவை கட்டுப்படுத்த என பல விதமான நன்மைகளை நமக்கு தருகிறது. 

Latest Videos

undefined

சுவையான சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 5
பெரிய வெங்காயம் - 1
சாம்பார் பொடி - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 ஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
எண்ணெய் - சிறிது 
உப்பு - தேவையான அளவு 

தாளிக்க :

கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து 
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு 

மூட்டு வலி & கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்கும் ''சாமை- பூசணிக்காய் தோசை''!

செய்முறை:

முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை தண்ணீரில் அலசி கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு குக்கர் வைத்து , அதில் தண்ணீர் ஊற்றி, கழுவிய சர்க்கரை வள்ளிக் கிழங்கினை போட்டு, குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைத்துக் கொண்டு, அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். விசில் அடங்கிய பின் குக்கரைத் திறந்து, கிழங்கின் தோலை எடுத்து விட்டு , ஒரே மாதிரியான சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்த பின், கடுகு, உளுத்தம் பருப்பு ,கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொண்டு, பின் வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட்டு, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அதன் வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். 

இப்போது வேக வைத்து வெட்டி வைத்துள்ள கிழங்கைப் போட்டு, சாம்பார் பொடி, மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நீர் தெளித்து நன்றாக கிளறி விட வேண்டும். கிழங்கில் மசாலா பொடி அனைத்தும் நன்கு ஒன்றுடன் ஒன்று கலந்து,நன்கு வாசனை வரும் போது ,அடுப்பில் இருந்து இறக்கினால் சூப்பரான சுவையில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல் ரெடி!

click me!