Mutton Kadai Recipe : பன்னீர் கடாய் தெரியும். அதென்ன ''மட்டன் கடாய்''! வாங்க செய்யலாம்!

By Dinesh TG  |  First Published Nov 7, 2022, 4:23 PM IST

சுவை நிறைந்த கடாய் மட்டனை வீட்டில் எளிமையான முறையில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


சன்டே போன்ற வார விடுமுறை தினங்களில், நாம் அனைவரும் வழக்கமாக அசைவ உணவுகளை சமைத்தோ அல்லது வெளியில் ஆர்டர் செய்தோ குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்வோம். அப்படி நாம் சமைக்கும் உணவுகளில் , அநேகமாக மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் கிரேவி போன்ற உணவுகள் தான் அதிகமாக இருக்கும். 

இந்த முறை சற்று வித்தியாசமாக, கடாய் மட்டன் செய்து சாப்பிடலாமா? இதனை பிரியாணி, நாண், சப்பாத்தி என் அனைத்திற்கும் வைத்து சாப்பிடும் விதத்தில் சுவை அருமையாக இருக்கும்.வீட்டில் உள்ள அனைவரும் இதனை விரும்பிசாப்பிட்டு அடிக்கடி செய்யுமாறு கேட்பார்கள். அப்படியான சுவை நிறைந்த கடாய் மட்டனை வீட்டில் எளிமையான முறையில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

undefined

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் -100 கிராம் 
தக்காளி - 2
தயிர் - 1/4 கப் 
பிரியாணி இலை - 2 
சீரகம் - 1 ஸ்பூன் 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 3 
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன் 
மல்லித் தூள் - 1/2 ஸ்பூன் 
எண்ணெய் -தேவையான அளவு 
உப்பு- தேவையான அளவு 

Potato Cheese Omelette : ஆம்லெட் டை இப்படி செய்து கொடுங்க. எத்தனை சாப்பிட்டோம் என்றே தெரியாது!

செய்முறை:

முதலில் மட்டனை சுத்தம் செய்து நன்றாக அலசிக் கொண்டு தனியாக வைத்துக் கொண்டு, அதில் கெட்டி தயிர் , உப்பு தூவி நன்றாக கலந்து சுமார் 20 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து வதக்கி ,பின் அதனை ஆற வைத்து விட்டு, ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொண்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

அதே கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடான பின், பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து அதனை ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் பீஸ்களை போட்டு, பொன்னிறமாக வறுத்து அதனையும் எடுத்து தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது அதே கடாயில்,சீரகம், பிரியாணி இலை சேர்த்து வறுத்துக் கொண்டு, அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிய பின், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு அதன் வாசனை செல்லும் வரை வதக்கி விட்டு, பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து , தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும். 

இப்போது இந்த கலவையில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், தனியாதூள்,கரம் மசாலா தூள் ஆகியவற்றை போட்டு அனைத்தின் கார வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும். இப்போது கடாயில் வறுத்து தனியாக எடுத்து வைத்துள்ள மட்டன் பீஸ்களை சேர்த்து கொஞ்சம் கிளறி விட்டு, சிறிது உப்பு சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் ஊற்றி, கடாயை ஒரு தட்டு போட்டு மூடி , கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரை ,தீயினை சிம்மில் வைத்து வேக வைத்து விட்டு, இறுதியாக வறுத்த பச்சை மிளகாய் சேர்த்தால், அசத்தலான சுவையில் மட்டன் கடாய் ரெடி!
 

click me!