பாரம்பரியமான முறையில், கமகமவென வீடே மணக்கும் ''பில்டர் காபி''!

By Dinesh TG  |  First Published Nov 7, 2022, 6:32 PM IST

கமகமவென்று மணக்கும் விதத்தில், பில்டர் காபியை வீட்டில் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .


நம்மில் அனைவரும் அதிகாலை எழுந்தவுடன் , டீயோ அல்லது காபியோ குடித்து விட்டு தான் அடுத்த பணிக்கே செல்வோம். அதை அருந்தினால் தான் புத்துணர்வு நமக்கு கிடைக்கும். ஒரு சிலர் காலை மட்டும் மல்லாது , ஒரு சிறு சிறு இடைவெளிகளில் கூட காபி அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பர்.

காபியில் பல வகை உண்டு, இன்ஸ்டன்ட் காபி, கேப்பச்சினோ, எஸ்ப்ரஸோ, லாட்டே ,பில்டர் காபி என அதன் வகைகள் இன்னும் நீண்டு கொண்டே போகும். 

Latest Videos

undefined

மேலும் காபிக்கென்றே பிரத்யேகமான காபி ஷாப்ஸ்களும் இன்று ஏராளமாக உள்ளன. ட்ரீட்டா! வாங்க! காபி ஷாப்க்கு போவோம் என்று சொல்லும் அளவிற்கு, ஏராளமான காபி வகைகளும், காபி ஷாப்களும் மார்க்கெட்டில்  வந்து விட்டன. 

என்ன தான் புது விதமான மற்றும் அட்ராக்ட்டிவ்வான காபி விதங்கள் இருந்தாலும் ,பாரம்பரியமான பில்டர் காபிக்கென்று ஒரு தனி சுவை உண்டு.அந்த வகையில் இன்று நாம் பாரம்பரியமான முறையில், வீடே கமகமவென்று மணக்கும் விதத்தில், பில்டர் காபியை வீட்டில் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் . 

தேவையான பொருட்கள்:

பால்- 1 கிளாஸ் 
சர்க்கரை - தேவையான அளவு 
பில்டர் காபி பவுடர்- 4 ஸ்பூன் 

Facial wrinkles: கர்ப்ப காலத்தில் முக சுருக்கமா? இனி கவலையே வேண்டாம்: இதை ட்ரை பன்னுங்க!

செய்முறை:

முதலில் டிக்காஷன் செய்து கொள்வதற்கு , பில்டரில் 4 ஸ்பூன் காபி பவுடர் போட்டு ,அதனை ஒரு ஸ்பூன் வைத்து நன்றாக சமப்படுத்திக் கொள்ள வேண்டும்.பின் அதற்கான மூடியை போட்டு ,மூடி விட்டு நன்றாக அழுத்திக் கொள்ள வேண்டும். 

ஒரு சாஸ் பானில் தண்ணீர் ஊற்றி, கொதிக்கும் தண்ணீரை,காபி பில்டர் மூடியில் இருக்கும் கைப்பிடியில் பாதி அளவு வருமாறு ஊற்றி, மூடி வைத்து விட வேண்டும். சுமார் 1/4 மணி நேரத்திற்குள்,காபி டிகாஷன் ரெடியாகி விடும். 

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து, ஒரு கிளாஸ் பால் ஊற்றிக் கொண்டு, கொதிக்க விட வேண்டும்.  (பாலில் தண்ணீர் சேர்க்காமல் செய்தால் தான் பில்டர் காபியின் சுவை சூப்பராக இருக்கும்)

பாலை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் கொதித்த பாலை 1 க்ளாசில் ஊற்றிக் கொண்டு,  அதில்  சிறிது காபி டிகாஷன் மற்றும் சர்க்கரை சேர்த்து , நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்  நுரை பொங்க மற்றொரு க்ளாசில் ஊற்றிக் கொண்டு சுட சுட , சுவையான பில்டர் காபி ரெடி!!

click me!