சருமத்தில் அரிப்பு தோன்றினால் லேசாக எடுத்துவிட வேண்டும்- புற்றுநோய் பாதிப்பாக இருக்கலாம்..!!

By Dinesh TGFirst Published Nov 13, 2022, 5:06 AM IST
Highlights

அரிப்பு தோல் பொதுவாக தோலை பாதிக்கும் பல்வேறு நோய்களின் ஒரு பகுதியாகும், அல்லது ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் காரணமாகவும் அது ஏற்படலாம்.
 

தொடர்ந்து தோல் அரிப்பு இருக்கும்பட்சத்தில் அதை அலட்சியமாக கருதக்கூடாது. இதனால் ஒவ்வாமை முதல் புறக்கணிக்கக்கூடாத பல்வேறு பிரச்னை வரை ஏற்படக்கூடும். எனவே நிலையாக தோல் அரிப்பு பிரச்னை இருக்கும் போது, அதில் அலட்சியம் காட்டக்கூடாது. தோல் அரிப்பு என்பது, தோலை பாதிக்கும் பல்வேறு நோய்களின் ஒரு பகுதியாகும். ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில் இது புற்றுநோயின் அறிகுறியாக கூட அமைந்துவிடுகிறது.

செரிமான அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் கணையம், வயிற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க ஜீரண சாறுகளை உற்பத்தி செய்வதே கணையத்தின் முக்கிய செயல்பாடு. சிலருக்கு கணைய புற்றுநோயின் அறிகுறியாக தோலில் அரிப்பு இருக்கும். இது கணைய புற்றுநோயின் மிகவும் பொதுவான அறிகுறி அல்ல, ஆனால் சிலரிடம் இந்த அறிகுறி காணப்படுகிறது.

கடுகின் நன்மைகள் தெரியும்- அதனுடைய எண்ணெய் பற்றி தெரியுமா உங்களுக்கு..??

பசியின்மை, திடீர் எடை இழப்பு, தோல் மற்றும் கண்களுக்குள் மஞ்சள் நிறம், சிறுநீர் மஞ்சள் நிறமாதல் (மஞ்சள் காமாலை), இரத்தக் கட்டிகள் மற்றும் நிலையான சோர்வு ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகளாகும். இவை தோலில் அரிப்புடன் இருந்தால், அது கணையப் புற்றுநோயைக் குறிக்கலாம்.

கணையத்தில் கட்டி முதலியன ஏற்பட்டால், கல்லீரல் பித்தத்தை வெளியிட முடியாது. இதனால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து தோலில் அரிப்பு ஏற்படும். இதனுடன், முன்பு குறிப்பிட்டது போல, தோல் நிறத்தில் உள்ள வேறுபாட்டையும் புரிந்துகொள்வது அவசியம். உங்களுக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்குமானால், உடனடியாக மருத்துவரைச் சென்று அணுகுங்கள்.
 

click me!