ருசியான முட்டை கபாப் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக மாலை நேரங்களில் ஏதோ ஒரு ஸ்னாக்ஸ்களை வீட்டில் தினமும் நாம் செய்து சாப்பிடுவோம். அதில் பொதுவாக வடை, பஜ்ஜி, போண்டா, புட்டு , கொழுக்கட்டை, கட்லெட் போன்றவற்றை செய்து அலுத்து விட்டவர்களுக்கு இந்த பதிவு நிச்சயம் உதவி புரியும்.
வீட்டில் முட்டை இருந்தால் போதும். இந்த ரெசிபியை சுவையாக செய்து விடலாம். இந்த ரெசிபியானது சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு ரெசிபி ஆகும்.மேலும் உறவினர்கள், நண்பர்கள் வந்து விட்டால் இதனை மிக ஈஸியாக செய்து கொடுத்து அவர்களது அன்பை பெற்று விடலாம். அத்தகைய ருசியான முட்டை கபாப் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
undefined
தேவையான பொருட்கள்:
முட்டை -5
கடலை மாவு - 200கிராம்
வெங்காயம் - 1 (பொடியாக அரிந்தது)
கொத்தமல்லி - 1 கையளவு (பொடியாக அரிந்தது)
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2ஸ்பூன்
பிரட் தூள் - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
Cauliflower Vadai : பருப்பு வடை தெரியும். இதென்ன காலிஃபிளவர் வடை!
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் முட்டைகளை சேர்த்து தண்ணீர் ஊற்றி, உப்பு தூவி, 2 விசில் வைத்து முட்டைகளை வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் முட்டைகளின் ஓடுகளை எடுத்து விட்டு அதனை துருவிக் கொள்ள வேண்டும் . அதனை ஒரு பௌலில் போட்டுக் கொண்டு அதில் , கடலை மாவு, வெங்காயம், மல்லித்தழை, மிளகுத்தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பின் பிசைந்த கலவையில் உப்பு, காரம் சரிபார்த்துக் கொள்ளவும். (வேண்டுமென்றால் உப்பு, காரம் சேர்த்து மீண்டும் நன்றாக பிசைந்துக் கொள்ளலாம் )
இப்போது பிசைந்த கலவையினை ஒரே மாதிரியான வடிவங்களில்
(உருண்டையாகவோ, சதுரமாகவோ ) செய்து கொண்டு , ஒவ்வொரு வடிவத்தையும் பிரட் தூளில் பிரட்டி விட்டு ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்த பின், தீயினை மிதமாக வைத்து , பின் கபாப்களை எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சூப்பரான சுவையில் முட்டை கபாப் ரெடி!!! இதனை சாஸ் வைத்து சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்ட்டாக இருக்கும்.