இன்று நாம் எளிதில் செய்யக்கூடிய பொட்டேடோ நக்கெட்ஸை க்ரிஸ்பியாக, சுவையாக, எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நூடுல்ஸ் போன்று நக்கெட்ஸும் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒரு வகை உணவாகும். இதனை மாலை நேரங்களில் பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், தட்டில் வைத்ததை சத்தம் இல்லாமலும் , மிச்சமில்லாமலும் சாப்பிட்டு முடிப்பார்கள். அந்த அளவுக்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும். இப்போது தொடர் மழை காரணமாக தமிழகம் முழுவதும் பல பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். இந்த கொட்டும் மழையில் சுட சுட சுவையாக நக்கெட்ஸ் செய்து சாப்பிடலாம் வாங்க!
நக்கெட்ஸில் சிக்கன் நக்கெட்ஸ், வெஜ் நக்கெட்ஸ், எக் நக்கெட்ஸ், கார்ன் நக்கெட்ஸ் என்று பல விதங்கள் உண்டு .அந்த வகையில் இன்று நாம் எளிதில் செய்யக்கூடிய பொட்டேடோ நக்கெட்ஸை க்ரிஸ்பியாக, சுவையாக, எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
undefined
தேவையான பொருட்கள்:
பிரட் - 4 ஸ்லைஸ்
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் -1 (பொடியாக அரிந்தது)
முட்டை-2
கரம் மசாலா- 1/2 ஸ்பூன்
மிளகு தூள்- 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தழை- கையளவு (பொடியாக அரிந்தது)
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
ஊட்டச்சத்து நிறைந்த "ராகி இட்லி" சாப்பிட்டு எலும்பு தேய்மானத்தை விரட்டலாம் வாங்க!
செய்முறை:
முதலில் பிரட் ஸ்லைஸ்களை பானில் வைத்து டோஸ்ட் செய்து எடுத்து விட்டு, பின் அதனை சின்ன துண்டுகளாக வெட்டி, மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரவென அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் , ஒரு குக்கர் வைத்து, தண்ணீர் ஊற்றி,மிதமான தீயில் வைத்து, உருளைக்கிழங்கை போட்டு ,3 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
பின் விசில் அடங்கிய பிறகு, குக்கர் திறந்து கிழங்கினை நன்றாக மசித்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த கிண்ணத்தில் பொடியாக அரிந்த வெங்காயம், மல்லித்தழை, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, பிசைந்து கொண்டு, ஒரே மாதிரியான வடிவங்களாக செய்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் இந்த தட்டினை பிரிட்ஜில் சுமார் 15 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். இப்போது ஒரு பௌலில் கார்ன் பிளார் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, கரைசல் ரெடி செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் சூடான பின், பிரிட்ஜில் வைத்துள்ள தட்டினை வெளியே எடுத்து, ஒவ்வொரு நக்கெட்ஸ் துண்டுகளையம் கார்ன் பிளார் கரைசலில் டிப் செய்து விட்டு, பின் பிரட் க்ரம்ஸில் பிரட்டிக் கொண்டு,கொதிக்கும் எண்ணெயில் போட்டு, அடுப்பின் தீயனை மிதமாக வைத்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவ்ளோதான் க்ரிஸ்பியான சூடான பொட்டேடோ நக்கெட்ஸ் ரெடி!! டொமேட்டோ கெட்சப் வைத்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும் இதனை இன்றே செய்து பாருங்கள்.