அவரைக்காய் பருப்பு கூட்டு இப்படி செய்து அசத்துங்க !

By Dinesh TG  |  First Published Nov 11, 2022, 2:49 PM IST

அவரைக்காயுடன் சிறு பருப்பு சேர்த்து சுவையான, சத்தான கூட்டு எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் . 
 


நாம் வழக்கமாக மதிய உணவுகளில் பெரும்பாலும் செய்து சாப்பிடுகின்ற காய்கறிகள் ஒரு சில தான்.அதிலும் குறிப்பாக கேரட், பீன்ஸ், கோஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, என்று தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இப்படி அதனையே அடிக்கடி செய்து அலுத்து விட்டதா? 

அதே போன்று கூட்டு என்றவுடன் சௌ சௌ கூட்டு, புடலங்காய் கூட்டு, கோஸ் கூட்டு, கீரை பருப்பு கூட்டு என்று தான் அதிகமாக சுவைத்து இருப்போம். கொஞ்சம் மாற்றமாக ஒரு கூட்டு ரெசிபியை இன்று பார்க்கலாமா? 

Tap to resize

Latest Videos

அப்படியென்றால் நாம் அவரைக்காயுடன் சிறு பருப்பு சேர்த்து சுவையான, சத்தான கூட்டு எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் . 

தேவையான பொருட்கள்:

அவரைக்காய்- 1/4கிலோ
பாசிப்பருப்பு – 100 கிராம் 
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
மஞ்சள் தூள் –1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் –1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
பூண்டு – 3பற்கள் 
கருவேப்பிலை – கையளவு 
கொத்தமல்லித்தழை –கையளவு 
உப்பு – தேவையான அளவு 
எண்ணெய் –தேவையான அளவு 

Cauliflower Vadai : பருப்பு வடை தெரியும். இதென்ன காலிஃபிளவர் வடை!

செய்முறை: 

முதலில் அவரைக்காயை அலசிக்கொண்டு, சின்ன சின்ன துண்டுகளாக அரிந்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிய துண்டுகளாக அரிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் பாசி பருப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து , 2 விசில் வைத்து வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி,, எண்ணெய் சூடான் பின் கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொண்டு, அடுத்து காய்ந்த மிளகாயை சேர்க்க வேண்டும். பின் பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை அனைத்தையும் நன்றாக வதக்கி விட வேண்டும்

அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு, அவரைக்காய் சேர்த்து, உப்பு தூவி கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் வரை வதக்கி கொண்டு, பின் சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். அவரைக்காய் வெந்த பின்பு, வேக வைத்து எடுத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து,மிக்ஸ் செய்து கொண்டு, சிறிது பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

அப்படியே அடுப்பில் 5 நிமிடங்கள் வைத்து அவ்வப்போது நன்றாக கிளறிக் கொண்டு இருக்க வேண்டும். இறுதியாக மல்லித்தழையை தூவி இறக்கினால் ,சத்தான சூப்பரான அவரைக்காய் கூட்டு ரெடி! இதனை சாதத்துடன் , நெய் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். 
 

click me!