ஊட்டச்சத்து நிறைந்த "ராகி இட்லி" சாப்பிட்டு எலும்பு தேய்மானத்தை விரட்டலாம் வாங்க!

By Dinesh TGFirst Published Nov 11, 2022, 4:51 PM IST
Highlights

ராகி வைத்து சத்தான ராகி இட்லியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 
 

நாம் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள நாம் உண்ணும் உணவானது ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருத்தல் அவசியமாகும்.அப்படி ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் உணவுகள் என்றால், பெரும்பாலும் அவை சிறுதானிய உணவு வகைகள் ஆகும்.

அந்த வகையில் இன்று சிறு தானியங்களில் ஒன்றான, கேழ்வரகு எனப்படும் ராகியை வைத்து ஒரு ரெசிபியை காண உள்ளோம். வழக்கமாக ராகி என்றவுடன், நாம் அனைவருக்கும் அதிகமாக நினைவில் வருபவை ராகி கொழுக்கட்டை, ராகி கூழ் , ராகி களி , ராகி தோசை, ராகி அடை ஆகியவை தான். ஆனால் இன்று நாம் சற்று மாற்றாக ராகி இட்லி ரெசிபியை காண உள்ளோம்.

ராகியானது எலும்பு தேய்மானம் பிரச்னையை வராமல் தடுக்க உதவுகிறது, மேலும் உடல் எடை குறைக்கவும், உடல் உஷ்ணத்தை குறைக்கவும், தாய்ப்பால் அதிகமாக சுரக்கவும், உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் , செரிமானத்தை சரி செய்யவும் பயன்படுகிறது. 

இன்னும் எண்ணில் அடங்கா பயன்களை தரும் ராகி வைத்து சத்தான ராகி இட்லியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

ராகி – 1கப்
உளுந்து – 1/2 கப்
இட்லி அரிசி – 1/2 கப்
வெந்தயம் – ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

Cauliflower Vadai : பருப்பு வடை தெரியும். இதென்ன காலிஃபிளவர் வடை!

செய்முறை:

முதலில் ராகியை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதே பாத்திரத்தில் இட்லி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் போட்டு நன்றாக 3 அல்லது 4 முறை அலசிக் கொண்டு, தண்ணீர் ஊற்றி கிட்டத்திட்ட 6 மணி நேரம் வரை ஊற விட வேண்டும். 

ஊறிய கலவையை தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொண்டு, கிரைண்டரில் போட்டு நைசாக மாவை அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, உப்பு போட்டு நன்றாக மிக்ஸ் செய்து விட்டு 6 முதல் 7 மணி நேரங்கள் வரை வைத்து புளிக்க செய்ய வேண்டும். 

பின் ஒரு அடுப்பில் ஒரு இட்லி பாத்திரம் வைத்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்கும் நேரத்தில், இட்லி தட்டுகளின் மீது ரெடியாக உள்ள மாவினை இட்லிகளாக ஊற்றி விட்டு, தட்டுகளை பாத்திரத்தில் வைத்து , மூடி விட்டு சுமார் 15 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தால், சத்தான ராகி இட்லி ரெடி!!! இதற்கு கார சட்னி வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். 

click me!