நகங்களைச் சுற்றி இறந்த செல்கள் இருந்தால் ஏற்படும் பாதிப்புகள் இதுதான்..!!

By Dinesh TGFirst Published Nov 13, 2022, 3:03 AM IST
Highlights

நம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் கவனித்துக்கொள்வது முக்கியம். விரல்கள் மற்றும் நகங்களுடன், நகங்களைச் சுற்றியுள்ள தோலையும் கவனித்துக் கொள்ள வேண்டும். சருமத்தில் ஏற்படும் காயம் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. 
 

குளிர்காலம் தொடங்கும் போது பலருக்கும் கை மற்றும் கால்களில் வெடிப்பு தோன்றும். ஒருசிலருக்கு முகத்தில் வெள்ளை செதில்கள் தோன்றும். அதுமட்டுமின்றி, விரல்கள் மற்றும் நகங்களைச் சுற்றியுள்ள தோலும் எரிச்சல் அடையும். இது புற அழகை கெடுத்து, நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கிறது. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பொதுவாக நகத்தைச் சுற்றி அதிக வெடிப்புகள் இருக்கும். இதை தடுக்கும் நோக்கில் பலரும் பாடி லோஷனைப் பயன்படுத்துகின்றனர். சில எளிய வீட்டு வைத்தியங்களை பின்பற்றுகின்றனர். இதைப் பயன்படுத்துவதன் மூலம் நகங்கள் மற்றும் விரல்களின் அழகைப் பராமரிக்கலாம்.

நகத் தோல்

அமெரிக்காவின் தோல் மருத்துவ அமைப்பு ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில், உங்கள் நகங்களின் க்யூட்டிகல் சேதமடைந்தாலோ, காயப்பட்டாலோ அல்லது உரிந்தாலோ, அதனால் நக ஆரோக்கியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல்நலனையும் பாதிக்கும் என்று தெரியவந்துள்ளது. நகத்தின் உட்புறத்தை எந்த வித அழுக்கு மற்றும் தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. ஒருவேளை இதில் பாதிப்பு ஏற்பட்டால், பல்வேறு தொற்றுகள் தோன்றும். அதனால் நகங்களின் அழகு கெட்டுப்போய்விடும்.

தேங்காய் எண்ணெய்

பழங்காலத்திலிருந்தே தேங்காய் எண்ணெய் மருந்தாகப் பயன்படுத்தப்ப்பட்டு வருகிறது. தேங்காய் எண்ணெய்யில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்க தேங்காய் எண்ணெயை தாராளமாக பயன்படுத்தலாம். குளிர்காலத்தில், பலருக்கு விரல்களில் வீக்கம் ஏற்படும். இதனால் நாளிடைவில் சருமம் பாதிக்கப்படும். உங்களுக்கும் இந்த பிரச்சனை இருந்தால் தேங்காய் எண்ணெய்யை நகங்களில் தடவி வாருங்கள். இதனால் இந்த பிரச்னை விரைவாக குணமடையும்.

டயட்டில் இருப்பவர்கள் மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்யவே கூடாதாம்..!!

கற்றாழை ஜெல்

பல சமயங்களில் நகம் க்யூட்டிகல், இறந்துபோன செல்கள் காரணமாக பாதிக்கப்படுகிறது. இதற்கு ஓட்ஸ் பயன்படுத்துவது தீர்வை தருகிறது. ஓட்ஸ் சேதமடைந்த சருமத்தை சரிசெய்யும் திறன் கொண்டது. ஓட்ஸை ஊறவைத்து பேஸ்ட் செய்து, பின்னர் அதை நகங்களில் தடவவும். இவ்வாறு செய்வதன் மூலம் நகத்தைச் சுற்றியுள்ள சருமம் மென்மையாகவும் பொலிவாகவும் இருக்கும். கற்றாழை ஜெல் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை நேரடியாக நகங்களில் தடவலாம். இது நகங்களுக்கு பளபளப்பைக் கொடுக்கும்.

பால்

பாலில் உள்ள கொழுப்பு சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. தோல் வறண்டிருந்தால், நகங்களைச் சுற்றியுள்ள தோல் உரிக்கப்பட்டு, 10 நிமிடங்களுக்கு பச்சை பால் ஒரு கிண்ணத்தில் நகங்களை ஊற வைக்கவும். இப்படி செய்தால் பிரச்சனை தீரும். 
 

click me!