Heart Disease: பரம்பரையாக இதய நோய் பாதிப்பு வருகிறதா! தடுக்கும் சில வழிமுறைகள் இதோ!

By Asianet Tamil  |  First Published Feb 11, 2023, 5:47 PM IST

மாரடைப்பு நோய். இதற்கும் பரம்பரைத் தன்மைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், சிறு பங்கு இருப்பதை நாம் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். மாறாக,  மறுக்க முடியாது. அதே சமயம், நம் மரபியலில் இருக்கும் அனைத்தும் கட்டாயமாக நடந்தே தீர வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
 


இன்றைய நவநாகரீக உலகில், உணவு முறை முற்றிலுமாக மாறி விட்டது. எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட தொடங்கி விட்டனர். இதன் விளைவு தான், இன்று இள வயதிலேயே பலரும் பல்வேறு வியாதிகளுக்கு ஆளாகியுள்ளனர். உணவு முறை ஒருபுறம் இருக்க, சிலருக்கு பரம்பரையாக சில வியாதிகள் தொடர்கிறது. அதில் ஒன்று தான் இதயம் சம்பந்தப்பட்ட மாரடைப்பு நோய். இதற்கும் பரம்பரைத் தன்மைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், சிறு பங்கு இருப்பதை நாம் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். மாறாக,  மறுக்க முடியாது. அதே சமயம், நம் மரபியலில் இருக்கும் அனைத்தும் கட்டாயமாக நடந்தே தீர வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

மரபியல் தொடர்பு

Latest Videos

undefined

மரபியல் தொடர்பான கணிப்புகள் அதிகரிப்பதற்கு, இன்றைய நம் வாழ்வியல் முறையும் மிக முக்கிய காரணமாக அமைகிறது. அதே வாழ்வியல் முறை மாற்றங்களினால், இந்த பாதிப்புகளை குறைக்கவும் முடியும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கு உதாரணமாக நீரிழிவு, புகை மற்றும் குடிப் பழக்கம், உயர் இரத்த அழுத்தம், தூக்கம் குறைவாக இருப்பது, உடற்பயிற்சிகள் செய்யாதது மற்றும் ஸ்ட்ரெஸ் போன்றவற்றை சொல்லலாம். நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் ஆகிய இரண்டையும் தொடக்கத்திலேயே கண்டறிந்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இதயநோய் பாதிப்பு

இதய நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். அதில் முதன்மை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், புகை மற்றும் மதுப் பழக்கத்தை முற்றிலுமாக தவிர்க்க தான். உடற்பயிற்சி செய்வதற்கு என தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். நம் மனதை ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக் கொள்வது ஆகியவற்றில் கவனமாக இருந்தாலே இதய நோய்களின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

செய்ய வேண்டியவை

ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது, முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஆரோக்கியத்திற்கு அருமருந்து முருங்கை கீரை பொடி !

ஹெச்எஸ் சிஆர்பி (hsCRP) மற்றும் கால்சியம் ஸ்கோர் (Calcium Score Screening) போன்ற பரிசோதனைகளை செய்வதன் மூலம் ரிஸ்க் அளவை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

குடும்பப் பின்னணியில் இதய நோய் பாதிப்பு இருந்தாலோ அல்லது ரிஸ்க் பிரிவில் இருந்தாலோ, உரிய மருத்துவருடன் கலந்து ஆலோசித்து, செய்யப்பட வேண்டிய பரிசோதனைகள் இவை தான். ஆகவே பரம்பரையாக இதய நோய் பாதிக்கும் ஆபத்து சிறிதளவு இருக்கும் நிலையிலும், அதனைத் தடுக்கவும் நம்மிடம் வழிகள் உள்ளது என்பதை யாரும் மறக்க வேண்டாம். 

click me!