வாருங்கள்! சுவையான பாதாம் கீர் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விழாக்களில் வாலென்டைன்ஸ் டேயும் ஒன்று. நமதுபாரதத்திலும் இதனை பலரும் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த வாலென்டைன்ஸ் டேக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. இதனை இளைஞர்கள் மட்டுமல்லாமல், திருமணமான தம்பதியினரும் இந்நாளில் தங்கள் அன்பை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்துகின்றனர். அப்படி அன்பை வெளிப்படுத்த சிறந்த முறையெனில் நாமே நம் கைகளால் ஒரு சிறப்பான ரெசிபியை செய்து நாம் அவர்கள் மீது கொண்டுள்ள காதலையும், அன்பையும் வெளிப்படுத்தலாம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான ரெசிபியான பாதாம் கீர் ரெசிபியை செய்து அவர்களுக்கு கொடுத்து நமது அன்பை பரிமாறலாம்.
வாருங்கள்! சுவையான பாதாம் கீர் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
என்ன! இட்லி மாவில் பால் பணியாரம் செய்யலாமா! வாருங்கள் பார்ப்போம்!
undefined
செய்முறை:
முதலில் பாதாமை வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு 1 மணி நேரம் வரை ஊர வைக்க வேண்டும். பின் அதன் தோல்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு டீ சாஸ் பான் வைத்து அதில் பால் ஊற்றி அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து பாலை கொதிக்க வைக்க வேண்டும்.பானிலிருந்து 1/4 கப் பாலை ஒரு பௌலில் தனியாக எடுத்து,மீதமுள்ள பாலினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
பௌலில் உள்ள பாலை சிறிது நேரம் ஆற வைத்து விட்டு பின் அதனை மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் ஊறி தோல் எடுத்துள்ள பாதாம் பருப்புகளை சேர்த்து நன்றாக அரைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.இப்போது அடுப்பில் சாஸ் பானில் கொதித்து கொண்டிருக்கும் பாலில், சிறிது குங்குமப்பூவை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து 5 நிமிடங்கள் வரை சிம்மில் வைத்து கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும்.
இப்போது பாலின் நிறம் சற்று மாறி வெளிரிய மஞ்சள் நிறத்தில் மாறுவதை காணலாம்.அப்போது ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்றாக கிளறி விட வேண்டும். இப்போது சர்க்கரை கலந்த பால் கொஞ்சம் கெட்டியான பிறகு அதில் அரைத்துள்ள பாதாம் பேஸ்ட் சேர்த்து கட்டிகள் ஏற்படாமல் கிளறி விட்டு 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
இறுதியாக ஜாதிக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி விட்டு , 2 மணிநேரம் ஃப்ரீசரில் வைத்து குளிர வைத்து எடுத்து இவ்வித வேண்டும். இறுதியாக ஒரு கண்ணாடி க்ளாசில் ஊற்றி சிறிது பொடித்த பாதாம்களை தூவி பரிமாறினால் மிகவும் சுவையான பாதாம் கீர் ரெடி!