இனி பெட் காஃபிக்கு நன்மையும்,ஆரோக்கியமும் நிறைந்த "கருப்பட்டி காஃபி" குடிங்க!

By Asianet Tamil  |  First Published Feb 11, 2023, 4:29 PM IST

வாருங்கள்! சத்தான கருப்பட்டி காபி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


நம்மில் அனைவரும் காலை மற்றும் மாலை நேரங்களில் காபியோ அல்லது டீயோ அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக தான் இருக்கிறோம். வழக்கமாக சாப்பிடும் டீ அல்லது காபிக்கு பதிலாக கருப்பட்டி காபியை ஒரு வேளையாவது எடுத்துக் கொண்டால் நமது ஆரோக்கியம் திறம் பட மேம்படும். கருப்பட்டியில் கால்சியம்,பொட்டாசியம், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் நமது உடம்பிற்கு தேவையான அனைத்து சத்துக்களையும் இது வழங்குகிறது.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தொடர்ந்து கருப்பட்டி காபியை பருகி வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். மேலும் எலும்புகள் மற்றும் பற்கள் பலமடைய செய்கிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து காணப்படுவதால் எல்லா காலங்களிலும் வருகின்ற காய்ச்சல்,சளி, இருமல் போன்றவற்றால் ஏற்படும் நோய் தொற்றில் இருந்து சுலபமாக விடுபடலாம். வளரும் குழந்தைகள், இளைஞர்கள், பால் ஊட்டும் பெண்கள், வயதானவர்கள் என்று அனைத்து வயதில் உள்ளவர்களுக்கும் ஏற்ற ஒரு ரெசிபி ஆகும்.

வாருங்கள்! சத்தான கருப்பட்டி காபி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

  •  பால் - 200மில்லி
  •  அச்சு கருப்பட்டி-3
  • தண்ணீர் - 2 க்ளாஸ்
  • காபி தூள் - 2 ஸ்பூன்

Latest Videos

undefined

வாலென்டைன்ஸ் டே ஸ்பெஷல் - டேஸ்ட்டான "பாதாம் கீர்" செய்து அன்பை வெளிப்படுத்தலாம்!

செய்முறை :

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பால் சேர்த்து நன்றாக காய்ச்சிக் கொள்ள வேண்டும். பால் நன்கு கொதித்து வந்த பிறகு அடுப்பை ஆஃப் செய்து வைத்து பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி பாலினை நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அச்சு கருப்பட்டிகளை நன்றாக பொடித்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு டீ சாஸ் பான் வைத்து அதில் 2 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி சூடு செய்ய வேண்டும். தண்ணீர் கொஞ்சம் சூடான பிறகு அதில் பொடித்து வைத்துள்ள கருப்பட்டிகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

கருப்பட்டி அனைத்தும் கரைந்த பின்னர் அதில் 2 ஸ்பூன் அளவு காபித்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது காபி தூள் தண்ணீரில் கலந்து நன்றாக வாசனை வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி அதனை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டி வைத்துள்ள காபியை 2 க்ளாஸ்களில் பாதி அளவிற்கு ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் இப்போது க்ளாஸ் முழுவதும் ஆற வைத்த பாலை ஊற்றி கொண்டு பருகினால் சுவையான கருப்பட்டி காபி ரெடி!

click me!