இதய நோயால் ஏற்படும் அதிக இறப்புகளுக்கு கொரொனா தான் காரணமா? மருத்துவர்கள் விளக்கம்..

By Ramya s  |  First Published Sep 30, 2023, 10:13 AM IST

மோசமான வாழ்க்கை முறை, உடலில் ஏற்படும் கோவிட்-தூண்டப்பட்ட மாற்றங்கள், மன அழுத்தம் ஆகியவை இதயப் பிரச்சினைகளை அதிகரிக்க பங்களிக்கின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


கடந்த சில ஆண்டுகளாக இதயம் தொடர்பான நோய்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. பெரியவர்கள் மட்டுமினிறி, குழந்தைகள், இளைஞர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் மாரடைப்பு ஏற்படுவதை பார்க்க முடிகிறது. மோசமான வாழ்க்கை முறை, உடலில் ஏற்படும் கோவிட் தொற்றால் தூண்டப்பட்ட மாற்றங்கள், மன அழுத்தம் ஆகியவை இதயப் பிரச்சினைகளை அதிகரிக்க பங்களிக்கின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் மூத்த இருதயநோய் நிபுணரான டாக்டர் ரஞ்சன் ஷர்மா, இதய நோய்க்கான காரணங்கள் மற்றும் தடுப்புகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “  இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதய நோய் அடிக்கடி ஏற்படுகிறது. காலப்போக்கில், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களின் பரவல் அதிகரிக்கிறது, இதன் விளைவாக திடீர் இதய இறப்புகள் அதிகரிக்கின்றன.

Tap to resize

Latest Videos

நமது புவியியல் மற்றும் மரபணு காரணிகள் மற்றும் அதிகரித்த நகரமயமாக்கல் காரணமாக நீரிழிவு மிகவும் அடிக்கடி ஏற்படுகிறது. நீரிழிவு உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமனை ஊக்குவிக்கிறது. கலோரி நுகர்வு அதிகரிப்பு, உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் ஆகியவை 25 முதல் 50 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை உயர்த்தியுள்ளன என்பதை கவனிப்பது மிகவும் முக்கியமானது.

வளர்ந்த நாடுகளில், அதிகரித்த விழிப்புணர்வு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி காரணமாக இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் இதய பிரச்சனைகள், இளைஞர்களுக்கு அதிகமாக ஏற்படுவதை நாங்கள் கவனித்து வருகிறோம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு விழிப்புணர்வும் அறிவும் தேவை.

ஆரோக்கியமான குழந்தைப்பருவத்தை உறுதிசெய்ய சிறு வயதிலேயே உடல் செயல்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டும்.பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமின்றி பணியிடங்கள், தங்கள் பணியாளர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை எப்படி வாழ்வது என்று கற்பிக்க வேண்டும்.கலோரி உணவுகள் மற்றும் தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே எந்த இதய பிரச்சனை ஆரம்ப அறிகுறிகளையும் புறக்கணிக்க வேண்டாம் மற்றும் உடனடியாக மருத்துவர் ஆலோசனை பரிந்துரைக்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.

குறைவாக மது அருந்தினாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்குமா? நிபுணர் விளக்கம்..

இதே போல் பிரபல இதய நோய் நிபுணரான சுவ்ரோ பானர்ஜி, இதுகுறித்து பேசிய போது “  இந்தியா, தொற்றாத நோய்களில் அதிக கவனம் செலுத்தாமல், தொற்றக்கூடிய நோய்களில் அதிக அக்கறை கொண்டுள்ளது. இப்போது, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயப் பிரச்சனைகள் போன்ற தொற்றாத நோய்கள் அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளில் தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்கள் இரண்டும் குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் இது அதிகரித்து வருகிறது.” என்று தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு ஏன் அதிக இதயப் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பது குறித்து விளக்கமளித்த அவர் : கொரோனாவுக்கு பின், இளைஞர்கள் தமனிகள் தடிமனாவதை எதிர்கொள்கின்றனர். சில புள்ளிவிவரங்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் இதய நோய்களில் 30 சதவீதம் அதிகரிப்பு உள்ளது என்று தெரிவிக்கிறது. ஆனால் கோவிட் மட்டும் முக்கிய காரணி அல்ல. உடற்பயிற்சி, மன அழுத்தம் மற்றும் துரித உணவுக்கான குறைவான நேரம் போன்ற வாழ்க்கை முறை மற்றொரு பெரிய காரணியாகும். மன அழுத்தத்திற்கு தவறான எதிர்வினையும் உள்ளது.” என்று தெரிவித்தார்.

click me!