ஒமிக்ரான் வகை கொரோனாவின் அதிகமுறை உருமாற்றம் அடைந்த BA.2.86 மாறுபாட்டின் முதல் பாதிப்பை உறுதி செய்துள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
மனித வரலாற்றில் மிக மோசமான வைரஸ் பரவல், மீண்டும் உலகளவில் அழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆம். கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மற்றொரு கொரோனா அலை வெடிக்கும் சாத்தியம் பற்றிய ஊகங்கள் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஒமிக்ரான் வகை கொரோனாவின் அதிகமுறை உருமாற்றம் அடைந்த BA.2.86 மாறுபாட்டின் முதல் பாதிப்பை உறுதி செய்துள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்றும், BA.2.86 வைரஸ் கண்டறிதல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மக்களுக்கு ஆபத்தானதாக இல்லை" என்று மாகாணத்தின் உயர்மட்ட மருத்துவர் போனி ஹென்றி மற்றும் சுகாதார அமைச்சர் அட்ரியன் டிக்ஸ் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
undefined
Omicron கொரோனாவின் புதிதாக கண்டறியப்பட்ட BA.2.86 மாறுபாடு முதன்முதலில் கடந்த மாதம் டென்மார்க்கில் கண்டறியப்பட்டது. நிபுணர்களின் கூற்றுப்படி,XBB.1.5 மாறுபாட்டுடன் ஒப்பிடும் போது BA.2.86 மாறுபாடு 35-க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. அதாவது இந்த மாறுபாடு 35 முறை உருமாற்றம் அடைந்துள்ளது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் எவ்வளவு நடக்க வேண்டும்? பிரபல மருத்துவர்கள் பதில்
BA.2.86 மாறுபாடு அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் பதிவாகி உள்ளது. BA.2.86 மாறுபாடு ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் தடுப்பு தடுப்பூசிகளைப் பெற்ற நபர்களுக்கு நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் அதிக திறனைக் கொண்டிருக்கக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உஹான் மாகாணத்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் சில மாதங்களில் உலகளாவிய கவலையாக மாறியது. கொரோனா காரணமாக கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோர் தங்கள் உயிரை இழந்தனர்.
இந்த வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. அதில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் ஆகியவை மோசமான மாறுபாடுகளாக அறியப்பட்டன.. இவை இரண்டும் இந்தியா உட்பட உலகின் முக்கிய நாடுகளில் மிகப்பெரிய கொரோனா அலைகளுக்கு வழிவகுத்தன.பின்னர் கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் படிப்படியாக மீண்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிஏ 2.86 மாறுபாடு, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா மற்றும் பிற நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. Omicron டெல்டாவில் இருந்ததைப் போலவே பல மாற்றங்களைக் கொண்டுள்ளது.
இந்த சூழலில் கொரோனாவின் BA2.86 மாறுபாடு வேகமாகப் பரவி வருகிறது, ஏனெனில் இது 35 புதிய பிறழ்வுகளைக் கொண்டுள்ளது, இது முன்னர் அறியப்பட்ட கோவிட் வகைகளிலிருந்து வேறுபட்டது. இது B82 மாறுபாடாட்டில் இருந்து சுமார் 30 மரபணு மாற்றங்களைக் கொண்டுள்ளது. அதன் ஸ்பைக் புரதத்தின் இந்த மாற்றங்கள் BA 2.86 மாறுபாட்டை ஆபத்தானதாக மாற்றுகின்றன. எவ்வாறாயினும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் வைரஸ் தொற்றின் தீவிரத்தை பாதிக்காமல் பாதுகாப்பாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.