“ கோவிட் போல அல்ல, ஆனால்..” சீனாவில் அதிகரிக்கும் நிமோனியா பரவல்.. உற்று கவனிக்கும் இந்தியா..

By Ramya s  |  First Published Nov 25, 2023, 8:13 AM IST

சீனாவில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள குழந்தைகளின் H9N2 மற்றும் சுவாச நோய் பாதிப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


சீனாவில் சுவாச நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பெய்ஜிங் உட்பட நாடு முழுவதும் உள்ள நகரங்களில் குழந்தைகளுக்கு நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருவதால் சீன மருத்துவமனைகள் ரம்பி வழிகின்றன என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவிடம் இதுகுறித்து விரிவான அறிக்கைகளை கோரியுள்ளது. 

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள குழந்தைகளின் H9N2 மற்றும் சுவாச நோய் பாதிப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சீனாவில் இருந்து பதிவாகும் பறவைக் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்கள் ஆகிய இரண்டிலும் இந்தியாவுக்கு ஆபத்து குறைவாகவே உள்ளது.

Tap to resize

Latest Videos

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தற்போதைய சூழ்நிலையில் இருந்து வெளிவரும் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது” என்று  தெரிவித்துள்ளது.சுகாதார துறை அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது, “ சீனாவில் தற்போது சுவாசநோய் பாதிப்பு அதிகரித்து வருவதற்கு  வைரஸ்களின் கலவை தான் காரணம். இது ஜூனோடிக் வைரஸ் போன்ற கொரோனா வைரஸ் அல்ல.” என்று தெரிவித்தனர்.

சீனாவில் H9N2 வைரஸ்

தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், கடந்த சில வாரங்களாக சீனாவில் சுவாச நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 அக்டோபரில் சீனாவில் H9N2 (ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்) தொற்று ஏற்பட்டதன் பின்னணியில், நாட்டில் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு எதிரான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க DGHS இன் தலைமையின் கீழ் சமீபத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

H9N2 வைரஸ் ஆபத்தானதா?

உலக சுகாதார மையத்தின் ஒட்டுமொத்த இடர் மதிப்பீடு மனிதனுக்கு மனிதனுக்கு பரவுவதற்கான குறைந்த நிகழ்தகவைக் குறிக்கிறது. எனவே H9N2 வைரஸ் மனிதர்களில் குறைந்த இறப்பு விகிதத்தைக் குறிக்கிறது. மனிதர்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் வனவிலங்கு துறைகளுக்கு இடையே கண்காணிப்பை வலுப்படுத்துவது மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றின் தேவை அங்கீகரிக்கப்பட்டது.

இந்த சூழலில் குழந்தைகளில் சுவாச நோய்களின் அதிகரிப்பு மற்றும் நிமோனியாவின் பாதிப்பு பற்றிய விரிவான தகவல்களுக்கு WHO சீனாவிடம் அதிகாரப்பூர்வ கோரிக்கையை விடுத்துள்ளது என்று ஐக்கிய நாடுகளின் சுகாதார நிறுவனம் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோவிட் விதிகளை கடுமையாக பின்பற்றியவர்களுக்கு மன ஆரோக்கியம் மோசமாக உள்ளதாம்.. ஏன் தெரியுமா?

தயார் நிலையில் இந்தியா

எந்தவொரு பொது சுகாதாரத் தேவைக்கும் இந்தியா தயாராக உள்ளது என்றும், மேலும் இதுபோன்ற பொது சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஒரு சுகாதார அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, சுகாதார உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உட்கட்டமைப்பு திட்டம் (PM-Ayushman Bharat Health Infrastructure Mission (PM-ABHIM) தற்போதைய மற்றும் எதிர்கால தொற்றுநோய்கள்/பேரழிவுகளுக்கு திறம்பட பதிலளிப்பதற்கு சுகாதார அமைப்புகளை தயார் செய்வதற்காக, முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என அனைத்து நிலைகளிலும் தொடர்ச்சியான பராமரிப்பு மற்றும் திறன்களை மேம்படுத்துகிறது.

click me!