
கொரோனா தொற்று பரவத்தொடங்கியதில் பலமுறை உருமாற்றம் அடைந்து புதிய வகை மாறுபாடாக உருவாகி வருகிறது. அதில் டெல்டா, ஒமிக்ரான் போன்றவை ஆபத்தான மாறுபாடுகளாக கருதப்படுகிறது. இந்த மாறுபாடுகளால் புதிய கொரோனா அலைகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் ஒமிக்ரான் வகை கொரோனாவின் HV.1 திரிபு தற்போது அமெரிக்காவில் பரவி வருகிறது. அந்நாட்டின் பெரும்பாலான கோவிட் நோய்த்தொற்றுகளுக்கு இந்த வகை தொற்று தான் காரணம் என்று கூறப்படுகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, அமெரிக்காவில் 29 சதவீத புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் இதன் காரணமாகவே ஏற்படுகின்றன.
ஒமிக்ரானின் பேரக்குழந்தை என்று அழைக்கப்படும் இந்த மாறுபாடு விரைவில் இங்கிலாந்தில் வேகமாக பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஐஸ்லாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் முழுவதும் புதிய திரிபு கண்டறியப்பட்டுள்ளது, எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அரசாங்கம் வலியுறுத்துகிறது. இது பிரான்சிலும் வேகமாக பரவி வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
HV.1 மாறுபாடு அதிக பரவக்கூடியது என்றும், நோயெதிர்ப்பு சக்தியை எளிதாக தவிர்த்து உடலுக்கு பரவும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், சோர்வு, மூக்கடைப்பு மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்றவை ஏற்படலாம். இந்த சூழலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை நெருங்கி வருவதால் இங்கிலாந்தில் நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் அனைத்து கொரோனா வகைகளும் நவம்பர் 2021 இல் பரவத் தொடங்கிய Omicron இன் வழித்தோன்றல்கள் தான். ஜூலை முதல் செப்டம்பர் வரை கொரோனா பாதிப்பு திடீரென உயர்ந்த நிலையில், பிறகு கோவிட் நோய்த்தொற்றுகள் குறையத் தொடங்கியுள்ளதாக அரசாங்க வட்டாரங்களின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சமீபத்திய தரவுகளின்படி, இங்கிலாந்தில் நவம்பர் 9 வரையிலான வாரத்தில் 4,549 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஏழு நாட்களில் 6,086 இல் இருந்து 25 சதவீதம் குறைந்துள்ளது.
கோவிட் விதிகளை கடுமையாக பின்பற்றியவர்களுக்கு மன ஆரோக்கியம் மோசமாக உள்ளதாம்.. ஏன் தெரியுமா?
HV.1 வகை கொரோனாவின் அறிகுறிகள் என்னென்ன?
அதிக காய்ச்சல்
இருமல்
சோர்வு மற்றும் பலவீனம்
மூக்கடைப்பு
மூக்கு ஒழுகுதல்
வயிற்றுப்போக்கு
தலைவலி
மூக்கு ஒழுகுதல்
இதுவரை, இங்கிலாந்தில் HV.1 பாதிப்ப்பு குறைவாகவே உள்ளன, ஆனால் விடுமுறை காலம் நெருங்கி வருவதால், பயணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே வரும் வாரங்களில் வேகமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.