Hot water: கொலஸ்ட்ராலை குறைக்க வெந்நீரை எப்படி பயன்படுத்த வேண்டும்?

By Asianet Tamil  |  First Published Feb 9, 2023, 3:39 PM IST

கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகள், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவையும் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதற்கு மற்ற சில காரணங்களாக இருக்கிறது.


இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கை முறையின் காரணமாக, உடலில் கெட்ட கொலஸ்டரால் அதிகரித்து விடுகிறது. மேலும், உடல் உழைப்பு குறைந்து போனதும் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகிறது. கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகள், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவையும் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதற்கு மற்ற சில காரணங்களாக இருக்கிறது.

கெட்ட கொலஸ்ட்ரால்

Latest Videos

undefined

கெட்ட கொலஸ்ட்ரால் என்பது மெழுகைப் போன்ற ஒரு பொருளாகும். இது, நரம்புகளில் குவிந்து காணப்படும். இதன் காரணமாகத் தான் இரத்த நாளங்கள் அனைத்தும் சுருங்கத் தொடங்கும். கொலஸ்ட்ரால் படிவதின் காரணமாகத் தான் இதயம் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் பாதிக்கிறது.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனை

மனித உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால், இதயத்திற்கு இரத்தம் சரியாக செல்லாமல், ​​மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு மருத்துவரை அணுகி, பரிசோதித்த பிறகு மருந்துகளை உட்கொள்ளலாம். இருப்பினும்,மிக எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே உடல் எடையை குறைக்க முடியும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் தண்ணீர்

அனைவரும் உயிர் வாழ முக்கிய மூல ஆதாரமாக இருப்பது தண்ணீர். மிக எளிதாக கிடைக்க கூடிய தண்ணீரை வைத்தே கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மை தான். தண்ணீரை சுட வைத்து வெந்நீராக அருந்துவதன் மூலமாக, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவானது குறைகிறது. இரத்த நாளங்களில் கெட்ட கொழுப்புகள் சேர்வதனால் அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனைக்கு வெந்நீரைக் குடிப்பது மிகவும் பயனுள்ள தீர்வாக அமைகிறது. 

கண் பார்வையை மேம்படுத்தும் கேரட் வைத்து சூப்பரான மில்க்க்ஷேக் செய்வோமா!

தொடர்ந்து சூடான நீரை குடித்து வந்தால், லிப்பிட் ப்ரோபைலை கட்டுப்படுத்த முடியும். மேலும்,  தமனிகளில் கொழுப்பு சேருவதையும் தடுக்க முடியும். வெந்நீர் இரத்த திரவத்தை வெகு விரைவாக அதிகரிக்கச் செய்கிறது. வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிப்பதால், இரத்தம் மெலிந்து இரத்த ஓட்டம் மேம்படுகிறது.

எண்ணெய் அதிகமுள்ள உணவுகள்

எண்ணெய் அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதற்கு மிகப்பெரிய காரணமாக அமைகிறது. எண்ணெய்ப் பொருட்களை சாப்பிடுவதால், உடலில் ட்ரைகிளிசரைடு அதிகரிக்கிறது. வெந்நீரை குடிப்பதனால், ட்ரைகிளிசரைடு துகள்கள் நரம்புகளில் சேர்வது தடுக்கப்படுகிறது.

வெந்நீரில் பூண்டை சேர்த்து சாப்பிட்டால் கொலஸ்ட்ராலின் அளவு குறைவதோடு, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலும் குறைகிறது.  

click me!