காதலில் வெற்றி அடைவதற்கும் வாஸ்து பார்க்கனுங்க..!! தெரியுமா உங்களுக்கு..??

By Asianet Tamil  |  First Published Feb 9, 2023, 2:37 PM IST

விரைவில் காதலர் தினம் துவங்கவுள்ளது. அதையொட்டி காதலர் வாரமும் தொடங்கவுள்ளது. அத்தகைய சூழலில் அன்பை பெற அல்லது அடைய முயற்சிப்பவர்கள், வாஸ்து சாஸ்திரம் கூறும் சில கருத்துக்களை கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள்
 


இந்தியாவில் காதலர் வாரம் விரைவில் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் அல்லது தம்பதிகள் ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக்கொண்டு மற்றும் அன்பான நேரத்தை ஒன்றாக அனுபவிக்க விரும்புகின்றனர். ஆனால் பல நேரங்களில் நாம் விரும்பும் அன்பைப் பெறுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும், இவ்வளவு நீண்ட காத்திருப்புக்குப் பிறகும் வெற்றி வராது. அத்தகைய சூழ்நிலையில், வாஸ்து சாஸ்திரம் நிச்சயம் கைக்கொடுக்கிறது. காதலர் தினத்தை முன்னிட்டு உங்களுடைய காதல் வாழ்க்கை வெற்றிக்கரமாக அமைய, வாஸ்து சாஸ்திரம் கூறும் சில கருத்துக்களை தெரிந்துகொள்வோம்.

ஜோடிப் புறா

Tap to resize

Latest Videos

undefined

வாஸ்து சாஸ்திரத்தில், விரும்பிய அன்பைப் பெற, வீட்டின் தென்மேற்கு திசையில் இரண்டு அழகான பறவைகளின் படத்தை வைக்க வேண்டும். அதாவது லவ்பேர்ட்ஸ், புறா போன்ற பறவைகளின் படம் வைக்கலாம். அவை ஜோடியாக அமர்ந்திருக்கும் படங்களை போடுவது பலனை இரட்டிப்பாக்கும்.

நீல நிறம் வேண்டாம்

சுவர் பெயின்ட் நீலமாக இருந்தால் சீக்கிரம் மாற்றுங்கள் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. இந்த நிறம் காதலில் தடைகளை உருவாக்குவதாக வாஸ்து குறிப்பிடுகிறது. எனவே வீட்டில் எங்காயவது வெள்ளை நிறம் அடித்திருந்தால், அதை உடனடியாக நீக்கிவிடுங்கள். மேலும், உங்கள் காதலைச் சொல்லி வெற்றி அடையும் வரை வீட்டின் கிழக்கு அல்லது தெற்கு திசையில் தூங்க வேண்டாம். இது உங்கள் காதலுக்கான யோகத்தை குறைத்துவிடுகிறது. 

குடும்ப புகைப்படம்

குடும்பத்தில் குடும்ப அன்பின் உணர்வை அதிகரிக்க, வீட்டின் வடமேற்கு திசையில் குடும்ப உறுப்பினர்களின் படத்தை வைக்க வேண்டும். அதற்கு எந்தவிதமான அலங்காரங்களையும் செய்யக் கூடாது. மாறாக அவ்வப்போது தூசி தட்டி சுத்தம் செய்து வருவது தம்பதிகளுக்கு இடையேயான காதல் வாழ்க்கையை மேம்படுத்தும்.

உடலுறவின் போது ஆணிடம் பெண்ணும், பெண்ணிடம் ஆணும் கூறும் பொய்கள்..!!

சிவப்பு நிறம் நல்லது

காதல் விஷயங்களில் முன்னேற்றத்திற்கு சிவப்பு நிறத்தை அதிகம் பயன்படுத்துங்கள். பெரும்பாலும் சிவப்பு நிற ஆடைகளை அணிவது நல்லது. மேலும், வீட்டில் மற்றும் குறிப்பாக படுக்கையறை அல்லது குளியலறையில் வெள்ளை, வெளிர் இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிறங்களைப் பயன்படுத்துங்கள்.

சூரிய ஓளி வேண்டும்

வீட்டில் சூரிய ஒளி அல்லது இருள் கூட காதலை பாதிக்கிறது. எனவே, வீட்டை சூரிய ஒளியால் நிரப்ப போதுமான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். மேலும், சூரிய ஒளி வீட்டிற்குள் நுழையும் திரைச்சீலைகள் போடுங்கள், இதனால் வீட்டிற்கு நல்ல வெளிச்சம் கிடைக்கும்.
 

click me!