சில ராசிக்காரர்கள் காதலில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அதே சமயம் சில ராசிக்காரர்கள் தங்கள் துணையை கண்மூடித்தனமாக நம்பி விரைவில் பிரிந்து விடுவார்கள். எந்த ராசிக்காரர்களுக்கு காதலில் பிரேக்-அப் நடக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை தெரிந்துகொள்வோம்.
காதல் ஒரு அழகான உணர்வு. எந்தவொரு உறவும் நீண்ட காலம் நீடிக்க, அதற்கு சரியா அன்பு தேவை. காதல் வாழ்க்கையை இன்னும் அழகாக்குகிறது. காதல் இல்லாமல் எந்த உறவும் அழகாக இருக்காது. ஆனால் இந்த காதல் விஷயத்தில் சிலர் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் காதலுக்கு ஈடாக தங்கள் துணையிடமிருந்து அன்பைப் பெறுகிறார்கள். அவர்கள் அன்பு செய்திடவே வாழ்வதாக மாறி விடுகிறது. அதேசமயத்தில் காலத்துக்கு தனது அன்பை முழு வலிமையுடன் வைத்திருக்க அவர்கள் முயற்சிக்கின்றனர்.
ஆனால் அதேசமயத்தில் வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களுக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தம் தான். தங்கள் துணையை அவர்கள் மிகவும் நேசிப்பவர்களாக இருப்பர். ஆனால் அதே அளவு அன்பு தன் துணையிடம் இருந்து அவர்களுக்கு திரும்ப கிடைப்பதில்லை. இதன் காரணமாக அவர்கள் உள்ளுக்குள் இருந்து உடைந்து, ஏமாற்றம் அடைந்துவிட்டதாக உணர்ந்து, அன்பும் காதலும் மீதான நம்பிக்கையை இழந்துவிடுகின்றனர்.
ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் தங்கள் துணையை முழு மனதுடன் நேசிக்கும் ராசிக்காரர்களைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம் எளிமையாகச் சொன்னால், இந்த ராசிக்காரர்கள் காதல் விஷயத்தில் சற்று துரதிர்ஷ்டசாலிகள்.
கடக ராசிக்காரர்கள்
கடக ராசிக்காரர்கள் இயல்பிலேயே மிகவும் கனிவானவர்கள் மற்றும் உணர்திறன் உடையவர்கள். அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படையாக காட்டக்கூடியவர்கள். வெளியிலும் உள்ளேயும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். அவர்களால் துக்கத்தை எளிதில் மறக்க முடியாது. அவர்கள் தங்கள் பழைய துணையை மறந்துவிட்டு முன்னேற நீண்ட காலம் எடுக்கும்.
கன்னி ராசிக்காரர்கள்
கன்னி ராசிக்காரர்கள் அடிப்படையில் எந்தவொரு நபருடனும் மிகவும் அன்பாக இருப்பார்கள், அதனால் அவர்களின் இதயம் உடைந்தால், அவர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனினும் கன்னி ராசிக்காரர்கள் நம்பிக்கையை இழக்காமல் உண்மையான அன்பைக் கண்டுபிடிப்பார்கள். அதில் எவ்வளவு வலி மற்றும் சிரமம் இருந்தாலும், தொடர்ந்து அன்பை தேடி அடைவார்கள்.
உடலுறவு முடிந்தவுடன் பெண்கள் செய்யவேண்டிய 5 செயல்கள்..!!
மகர ராசிக்காரர்கள்
மகர ராசிக்கு அதிபதி சனி. இந்த ராசிக்காரர்கள் காதலில் மிகவும் துரதிர்ஷ்டசாலிகள். அவர்கள் எப்போதும் தங்கள் உண்மையான அன்பை தவறான நேரத்தில் கண்டுபிடிப்பார்கள். இந்த அடையாளத்தை உடையவர்கள் வாழ்க்கையில் அன்பிற்கு உயர்ந்த இடத்தைக் கொடுக்கிறார்கள். காதல் இல்லாவிட்டால், அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
மீன ராசிக்காரர்கள்
காதல் என்று வரும்போது, மீன ராசிக்காரர்களின் விதி ஒப்பற்றது. அவர்கள் ஒருபோதும் மக்களின் தீய அல்லது கெட்ட பக்கத்தைப் பார்க்க முயற்சிப்பதில்லை. அவர்கள் தங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக தங்கள் சொந்த மகிழ்ச்சியை தியாகம் செய்கிறார்கள். ஆனால் மற்ற ராசிக்காரர்களுடன் ஒப்பிடும்போது, உறவுகளில் காணப்படும் ஏமாற்று வித்தைகளை நம்பி விரைவில் ஏமாந்து விடுவார்கள். அதேசமயத்தில் தனக்கு நேர்ந்த சோகங்களை தூக்கி எறிந்துவிட்டு, தொடர்ந்து முன்னேறிப் போய் கொண்டே இருப்பார்கள்.