சுமார் 85 வயதான முதியவர் மீது கொண்ட காதலால், 24 வயது இளம்பெண் வீட்டை எதிர்த்து அவரையே திருமணம் செய்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
காலத்தின் போக்கு மாறிவருகிறது. புராண கால திருமணங்கள் கூட இப்போது நடந்து வருகிறது. தந்தையே மகளை திருமணம் செய்த சம்பவம் அண்மையில் இந்தியாவில் நடந்தது. இந்நிலையில் 61 வருட இடைவெளியை உடைய முதியவரை காதலித்து கரம் பிடித்துள்ளார் 24 வயது இளம்பெண்ணான மிராக்கிள். மிராக்கிள் பார்த்த முதல் கணத்தில் காதலில் விழவில்லையாம். அவர் 2019இல் தான் சார்லஸ் போக்கை (84வயது) முதன் முதலாக சந்தித்துள்ளார்.
அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றங்கரை பகுதி ஸ்டார்க்வில்லி பகுதியில் சலவை தொழிலாளியாக இருந்த மிராக்கிள், சார்லஸை முதன்முதலாக சந்தித்தபோது அவர்களுக்குள் காதல் இல்லை, நட்பு மட்டுமே மலர்ந்தது. இருவரும் பழக பழக நட்பு காதலாக மாறியது. அதன் பிறகே இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இத்திருமணம் பல தடைகளை மீறி தான் நடந்துள்ளது. மணப்பெண் மிராக்கிள் வீட்டில் கடும் போராட்டம் நடந்துள்ளது.
undefined
'நாங்கள் இருவரும் முதல் முறையாக சந்தித்தபோது, எங்கள் இருவருக்கும் எந்த விதமான உணர்வும் ஏற்படவில்லை. ஆனால் நாளுக்கு நாள் சார்லஸ் என்னுடன் நெருங்கி பழகி வந்தார். நான் அவருடன் மகிழ்ச்சியாக என்பதை அறிந்தேன். அந்த உணர்வு வயது வித்தியாசத்தை மறக்கடித்தது" என்கிறார் மிராக்கிள் காதல் மிளிர.
இவர்களின் திருமணத்திற்கு முதலில் குடும்பத்தினர் ஆதரவு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் தன் காதல் துணை மிராக்கிளை, சார்லஸ் அன்போடும், பரிவோடும் கவனித்துக் கொள்வதை கண்ட மிராக்களின் தாயார் தமிகா பிலிப்ஸ் மற்றும் தாத்தா ஜோ பிரவுன் அவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர். மிராக்கிளின் தந்தை கரீம் பிலிப்ஸ் சுதாராமுக்கு இத்திருமணம் பிடிக்காமலே இருந்துள்ளது. ஆனால் மகளின் மகிழ்ச்சியைக் கண்டு அவரும் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்.
ஓய்வுபெற்ற ரியல் எஸ்டேட் முகவர் சார்லஸ். இவர் தனக்கென ஒரு சந்ததி வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளார். அதனால் இத்தம்பதியினர், செயற்கை முறையில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய காதலுக்கு பலர் விமர்சனங்களை கூறினாலும் கூடவே வாழ்த்து மழையும் பொழிகிறது.
இதையும் படிங்க: 'முதலில் காதலை சொன்னது மருமகள் தான்' சொந்த மகனின் மனைவியை திருமணம் செய்து வாழும் முதியவர்!
இதையும் படிங்க: தாம்பத்தியத்தில் ஸ்பீடா? ம்ஹூம்... மெல்ல தீண்டும் விரல் வித்தையை தெரிந்து கொள்ளுங்கள்.. நிபுணர் அட்வைஸ்