உடலுறவு முடிந்தவுடன் பெண்கள் செய்யவேண்டிய 5 செயல்கள்..!!

By Asianet TamilFirst Published Feb 7, 2023, 11:23 PM IST
Highlights

உடலுறவின் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. எனினும், உடலுறவுக்கு பிறகு குறிப்பிட்ட சில விஷயங்களை செய்யாமல் இருந்தால், பிறப்புறுப்பின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
 

மனித உடலுக்கு உடல் இயக்கம் மிகவும் முக்கியம். அதில் உடலுறவும் முக்கியமான பகுதியாகும். மகிழ்ச்சியான உடலுறவின் மூலம் மகிழ்ச்சி நீடிக்கிறது, ஆயுட்காலம் அதிகரிக்கிறது மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுகிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர். எனினும், உடல் அமைப்பை சரியாக கவனிக்க தவறுவது பாலியல் நோய் பரவலை ஏற்படுத்திவிடக் கூடும். அதனால்தான் உடலுறவுக்குப் பிறகு ஏற்படும் குறிப்பிட்ட பிரச்னைகளைத் தவிர்க்க சில சுகாதார குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும். கலவி முடிந்ததும் பிறப்புறுப்பை சுத்தம் செய்வது முக்கியம், அதேபோன்று சில ஆரோக்கியமான குறிப்புகளை பின்பற்றுவதும் உடலுக்கு நன்மையை தருகின்றன. அதுகுறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

சிறுநீர் கழித்தல்

உடலுறவு முடிந்ததும் ஆணும் பெண்ணும் சிறுநீர் கழிப்பது மிகவும் முக்கியம். அது உங்களுடைய பி.ஹெச் சமநிலையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிப்பது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கும். சிறுநீர்ப்பையை காலி செய்வதன் மூலம் உடலுறவின் போது சிறுநீர்ப்பைக்குள் நுழைந்த பாக்டீரியாக்கள் வெளியேறிவிடும்.

தொடாமல் சுத்தம் செய்வது முக்கியம்

பிறப்புறுப்பை தொட்டு கழுவுதல் கூடவே கூடாது. இதனால் யோனியின் பிஎச் சமநிலை பாதிக்கப்படுகிறது. ர்ப்பம் அல்லது பாலியல் பரவும் நோய்களைத் தடுப்பதற்குப் பதிலாக தொடுதல் தொற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. வாசனை திரவியங்கள், எண்ணெய்கள் அல்லது கடுமையான இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதும் நல்லதல்ல. இதன் காரணமாக, பிறப்புறுப்பின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

இப்படித்தான் துடைக்க வேண்டும்

உங்கள் தனிப்பட்ட பகுதியை தவறான முறையில் சுத்தம் செய்வது, யூ.டி.ஐ பிரச்னைகளை அதிகரிக்கக்கூடிய பாக்டீரியாவை அதிகரிக்கும். மலக்குடலில் இருந்து பாக்டீரியாவால் உங்கள் பிறப்புறுப்பு மாசுபடுவதை தவிர்க்க, முன்னிருந்து பின்னோக்கி துடைக்க மறக்காதீர்கள். துடைக்க சுத்தமான, உலர்ந்த, மென்மையான துண்டு பயன்படுத்தவும்.

பருத்தி உள்ளாடைகளை அணியுங்கள்

உங்களின் அந்தரங்கப் பகுதியை சுத்தம் செய்து உலர்த்திய பிறகு, சுத்தமான ஆடைகளை அணியுங்கள். அதே போல் ஆடைகளை அணிவதால் சினைப்பையில் ஈரப்பதம் இருக்கும். இது ஈஸ்ட் தொற்று அல்லது யு.டி.ஐ பாதிப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. மிகவும் இறுக்கமான மற்றும் நைலான் போன்ற துணிகளால் செய்யப்பட்ட ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவும், அவை உங்கள் சருமத்தை எரிச்சலூட்டுகின்றன. பருத்தி போன்ற மென்மையான ஆடைகளை அணிவது நல்லது.

உடலுறவின் போது ஆணிடம் பெண்ணும், பெண்ணிடம் ஆணும் கூறும் பொய்கள்..!!

ரத்தப்போக்கு அலட்சியம் வேண்டாம்

உடலுறவுக்குப் பிறகு ஏதேனும் அசாதாரண வலி, வெளியேற்றம் அல்லது இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால், மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், இந்த அறிகுறிகள் பாலியல் ரீதியாக பரவும் நோய், பிறப்புறுப்பு அதிர்ச்சி அல்லது வேறு ஏதேனும் தொற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம். அதனால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.
 

click me!