இலவங்கப்பட்டை மற்றும் அர்ஜுனா பட்டையை கொண்டு கொலஸ்ட்ரால் மற்றும் மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் ஒரு தீர்வு பற்றி இங்கு பார்க்கலாம்.
Home Remedy To Reduce Bad Cholesterol : தற்போது மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்க வழக்கங்களால் பலர் பல கொடிய நோய்களுக்கு ஆளாகின்றன. அந்த பிரச்சனைகளில் ஒன்று தான் கொலஸ்ட்ரால். நம்முடைய உடலில் இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன. ஒன்று நல்ல கொழுப்பு. மற்றொன்று கெட்ட கொழுப்பு. நல்ல கொழுப்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதுவே கெட்ட கொழுப்பு மாரடைப்பு போன்ற கடுமையான நோயை ஏற்படுத்தும். எனவே சரியான நேரத்தில் உடலில் இருக்கும் கொழுப்பை குறைப்பது மிகவும் முக்கியம். இல்லையெனில் அது அதிகரித்தால், அது ரத்த நாளங்களில் அடைத்துவிடும். இதன் காரணமாக மாரடைப்பு மற்றும் இதய நோயால் நீங்கள் பாதிக்கப்படலாம்.
இதையும் படிங்க: உடலில் கெட்ட கொழுப்பைக் குறைக்க இன்றிலிருந்து இந்த '7' விஷயங்களைச் செய்ங்க!
கொழுப்பை எவ்வாறு குறைப்பது?
கொலஸ்ட்ராலை குறைக்க ஒரு சிலர் வாழ்நாள் முழுவதும் பலமுறை மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் வீட்டில் வைத்தியம் மூலம் அதை சுலபமாக குறைந்து விடலாம் தெரியுமா? ஆம், அர்ஜுனா பட்டை மற்றும் இலவங்கப்பட்டை இவை இரண்டும் கொழுப்பை குறைக்கும் ஆயுர்வேத மூலிகையாகும். மேலும் அவை உங்களுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கும். சரி இப்போது கொழுப்பை குறைக்க இலவங்கப்பட்டை மற்றும் அர்ஜுனா பட்டையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை குறித்து இங்கு காணலாம்.
இதையும் படிங்க: இந்த '5' அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க.. இவை கொலஸ்ட்ரால் கொண்டு வரும் வலி
கொழுப்பை குறைக்க வீட்டு வைத்தியம்:
தேவையான பொருட்கள்:
இலவங்கப்பட்டை - சிறிதளவு
அர்ஜுனா பட்டை பொடி - அரை ஸ்பூன்
தண்ணீர் - 1 கிளாஸ்
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி பிறகு அதில் அர்ஜுனா பட்டை மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் ல். தண்ணீர் பாதியாக வந்ததும் அதை வடிகட்ட வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
அர்ஜுனா பட்டை மற்றும் இலவங்கப்பட்டை கலந்த தண்ணீரை நீங்கள் தேநீர் போல கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் குடித்து வந்தால் உடலில் இருக்கும் கொழுப்பு குறைவது மட்டுமல்லாமல், பல நோய்களின் அபாயமும் குறையும்.
இந்த பானத்தின் நன்மைகள்:
- இந்த பானம் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றன.
- உடலில் கெட்ட கொழுப்பை குறைத்து, இதய நோயில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகின்றன.
- இந்த மூலிகை பானம் உங்களது இதயத்தை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைக்க உதவுகிறது மற்றும் மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் என்று மருத்துவர்கள் சொல்லுகின்றனர்.
- இந்த ஆயுர்வேத பானம் உங்களது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவும். எனவே நீங்கள் ஏதேனும் செரிமான பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், தினமும் காலையில் இந்த பானத்தை குடியுங்கள். இதனால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
குறிப்பு : மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த ஒரு முயற்சியும் செய்ய வேண்டாம்.