நீங்கள் தர்பூசணியின் நன்மைகளை இரட்டிப்பாக பெற விரும்பினால், அதை ஒரு சிறப்பு வழியில் சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் வழிகாட்டுகிறார்கள். வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
tamil health updates watermelon benefits: கோடையில் தர்பூசணி பழம் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகளை அடையலாம். இதன் சுவை காரணமாக அனைவருக்கும் பிடித்த பழமாகவும் உள்ளது. நீர்ச்சத்து மிகுந்த இந்த பழத்தை, தினமும் சாப்பிட்டால் கோடை வெப்பத்தை கடந்துவிடலாம். ஆனால் அதை அப்படியே சாப்பிடுவதை விட அதனுடன் இன்னொரு பொருளையும் சேர்த்து உண்பதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறதாம். நிபுணர் சொன்ன அந்த சூப்பர் டிப்ஸை இங்கு காணலாம்.
ஊட்டச்சத்து நிபுணர் மனோலி மேத்தா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் அந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார். தர்பூசணியை எலுமிச்சையுடன் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவை அதிகரிப்பதோடு, ஊட்டச்சத்தும் உயரும். தர்பூசணியில் எலுமிச்சைப் பழத்தை சில துளிகள் பிழிந்து சாப்பிட்டால் அலாதி சுவை கிடைக்கும். இதை பழச்சாறாக (juice) எடுத்து கொள்ளலாம். எலுமிச்சை சில துளிகள் போதும். அதிகமாக சேர்த்தால் புளிப்பு சுவை கூடிவிடும்.
இதையும் படிங்க: தூங்கும் பொழுது இடது பக்கமா தான் சாய்ந்து படுக்கனுமா? உண்மையான காரணம் தெரிந்தால் இப்படி தான் தூங்குவீங்க..!
எலுமிச்சம்பழத்துடன் தர்பூசணி சாப்பிடுவது ஏன் நல்லது?
வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை தர்பூசணி மற்றும் எலுமிச்சை இந்த இரண்டு பொருள்களிலும் ஏராளமாக காணப்படுகின்றன. இந்த சத்துக்கள் நமது பற்களுக்கும், நோயெதிர்ப்பு அமைப்புக்கும் நல்லது. தர்பூசணியில் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது நம்முடைய சருமத்திற்கு நல்லது. தர்பூசணி, எலுமிச்சை இரண்டும் சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் நம் தாகத்தைத் தணிக்கின்றன. உடலை நீரேற்றமாக வைத்திருக்கின்றன. கோடையில் வெப்பத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
தர்பூசணி, எலுமிச்சை இரண்டிலும் சோடியத்துடன் வைட்டமின் சி காணப்படுகிறது. கால்சியம், பொட்டாசியம் மாதிரியான எலக்ட்ரோலைட்டுகள் நம்முடைய அன்றாடப் பணிகளைச் சரியாகச் செய்ய உதவுகின்றன. இது தசைகளின் சரியான இயக்கம், நாடித் துடிப்பின் சரியான வேகம், உடலில் சரியான அளவு நீரை பராமரிக்க உதவுகிறது.
இதையும் படிங்க: கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழத்தை ஒதுக்கக் கூடாது.. அந்த பழம் 1 சாப்பிட்டால்.. இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்.!